Vilangu Others
www.garudabazaar.com

Bigg Boss-ஆ? ‘விக்ரம்’ திரைப்படமா? .. கமல்ஹாசன் எடுத்த பரபரப்பு முடிவு.. பரவும் அறிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Kamal haasan, bigg boss ultimate, 20, பிப்ரவரி 2022: சென்னை, 20,பிப்ரவரி 2022:  விஜய் டிவியில் 5 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இவற்றை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன் பின்னர் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.

Kamal haasan opt out from bigg boss ultimate for vikram movie

கமலின் பரபரப்பு அறிக்கை

இந்நிலையில் இதுபற்றி தற்போது நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், “தமிழில் ஓடிடியில் பிக்பாஸ் நிகழ்ச்சி டிஜிட்டல் அவதாரம் எடுத்தபோது, அதை முன்னெடுக்கும் பெருமை கிடைத்தது. டிஸ்னி+ஹாட் ஸ்டார் புரட்சியை நிகழ்த்தி இருக்கிறது. இவர்களோடு இணைந்து இந்த புதுமைப் பாதையில் பயணிப்பதில் பெருமைப்படுகிறேன்.

Kamal haasan opt out from bigg boss ultimate for vikram movie

ஆனால் பிறகு லாக்டவுனில் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என்று நான் ஒதுக்கிய தேதிகளும், விக்ரம் படப்படிப்பு தேதிகளிலும் மாறின. இந்த இறுதி கட்ட படப்பிடிப்பு சமயத்தில்  என்னோடு பணியாற்றும் முக்கிய பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடைய தேதிகளையும் மாற்றியமைக்கும் நிலை உண்டாகும். எனவே பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் படம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத நெருக்கடியான சூழல்.

Kamal haasan opt out from bigg boss ultimate for vikram movie

இந்திய சினிமாவின்‌ முக்கிய நடிகர்களையும்‌, கலைஞர்களையும்‌, தொழில்நுட்ப வல்லுனர்களையும்‌ இப்படி என் தனிபட்ட காரணங்களால் தாமதிக்கச்‌ செய்வது நியாயமாகாது. அவர்களும் சில பணிகளை‌ ஒப்புக்கொண்டுள்ளார்கள். அதை அவர்கள் செய்ய வேண்டும்.  எனவே வேறு வழியில்லாமல், கனத்த இதயத்துடன், பிப்ரவரி 20-ஆம்‌ தேதி எபிஸோடுக்குப்‌ பிறகு‌ பிக்பாஸ்‌ அல்டிமேட்‌ நிகழ்ச்சியிலிருந்து விலகும் முடிவை எடுக்க நேர்ந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார். 

மிகப்பெரிய வருத்தம்...

Kamal haasan opt out from bigg boss ultimate for vikram movie

மேலும் பேசியவர் “தமிழில்‌ பிக்பாஸ்‌ நிகழ்ச்‌சி நாள்தொட்டு அதன்‌ அங்கமாக இருந்து ரசிகர்களுடன் உரையாடி வந்த எனக்கு இது மிகப்பெரிய வருத்தம். விஜய்‌ தொலைக்காட்சியின்‌ நிர்வாகம்‌, எனது இந்த முடிவுக்கு சிறந்த என்னோடு ஒத்துழைத்தார்கள்‌. இந்த இக்கட்டான சூழலில் டிஸ்னி ப்ளஸ்‌ ஹாட்ஸ்டார்‌ மற்றும்‌ விஜய்‌ டிவி நிர்வாகம்‌ எனக்களித்த‌ அன்பும்‌ ஆதரவும்‌ என்னை நெகிழச் செய்துள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ்‌ சீசன்‌ 6-ல்‌ சந்திக்கிறேன்‌

நிறைவாக, “என் விலகலால் உண்டாகும் சிரமங்களுக்காக அவர்களிடமும் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்‌. இது மிகச்‌சிறிய, தற்காலிக இடைவெளியே,  விரைவில்‌ பிக்பாஸ்‌ சீசன்‌ 6-ல்‌ சந்திக்கிறேன்‌” என அந்த அறிக்கையில் கமல் கமல்ஹசன் தெரிவித்துள்ளார்.

Also Read: ‘ரஜினியுடன் அடுத்த படமா?’ - வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரின் பரபரப்பு விளக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal haasan opt out from bigg boss ultimate for vikram movie

People looking for online information on BB Ultimate Tamil, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Bigg Boss Ultimate Tamil, Kamal Haasan, Kamal haasan opt out from bigg boss ultimate for vikram movie, KAMALHAASAN, Vikram Movie will find this news story useful.