www.garudabazaar.com

மலையாளத்திலும் விளையாடுறாரே கமல் சார்! மம்மூட்டி பிறந்த நாளுக்கு ‘அடிபொலி’ வாழ்த்து! Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழிலும் மலையாளத்திலும் தவிர்க்க முடியாத நடிகர் மம்மூட்டி.  மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி தமிழில் ஹீரோவாகவே நடித்தாலும் சரி, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தாலும் சரி கேரக்டரை உள்வாங்கிக் கொண்டு நடிக்கக் கூடியவர்.

kamal haasan wishes Mammootty 70th Birthday கமல் மம்மூட்டி

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தமிழில் உருவான ‘அழகன்’, மணிரத்னத்தின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ‘தளபதி’, இயக்குநர் ராம் இயக்கிய ‘பேரன்பு’ என 80கள் முதல் தற்போது வரை தமிழில் தமது ஆகச்சிறந்த பங்களிப்பை தந்து வரும் மம்மூட்டி மலையாளத்தில் ஸ்டைலிஷ் நடிகராக இன்றும் மிளிருகிறார்.

இவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ள நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் மலையாளத்தில் வாழ்த்து கூறியுள்ளார். சரளமாக பல மொழிகளை பேசுவதில் வல்லவரான கமல் தமிழில் வார்த்தைகளில் விளையாடுவார் என்பது அனைவருக்குமே தெரியும்.

அதே சமயம் கமல்ஹாசனின் பன்மொழிப் புலமையை ‘பஞ்ச தந்திரம்’ படத்தில் வரும் அந்த க்ளைமாக்ஸ் காட்சிகளில் காண முடியும்.

இந்நிலையில்தான் நடிகர் மம்மூட்டி  இந்த வயதிலும் ஆக்டிவாக இருப்பதை குறிப்பிட்டு நெகிழ்ந்தும் வியந்தும் பாராட்டியும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

நடிகர் மம்மூட்டி தம் 70வது பிறந்த நாளை செப்டம்பர் 7-ஆம் தேதி கொண்டாடும் நிலையில், இது தொடர்பான தம் வாழ்த்து செய்தியில், திரையுலகில் சீனியராக இருந்தாலும், தன்னை விட வயதில் சீனியரான மம்மூட்டிக்கு வாழ்த்து என சொல்லும் விதமாக சீனியருக்கு சீனியரிடம் இருந்து வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

Also Raad: ‘சிறையில்’ காதலன்.. வெளியில் மூளையாய் செயல்பட்டு ரூ.200 கோடி மோசடியா? பிரியாணி பட நடிகை கைது!

மலையாளத்திலும் விளையாடுறாரே கமல் சார்! மம்மூட்டி பிறந்த நாளுக்கு ‘அடிபொலி’ வாழ்த்து! VIDEO வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

kamal haasan wishes Mammootty 70th Birthday கமல் மம்மூட்டி

People looking for online information on Kamal Haasan, Mammootty will find this news story useful.