“பயமுறுத்தி கத சொல்றாரு.. கேப்டன் ஆகுறாரு.. ஆல் ரவுண்டர் போலயே”.. கலக்கும் ராஜூ பாய்!!! #biggbosstamil5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் ஹவுஸ்மேட்ஸ் ஒரு வழியாக செட்டில் ஆகிவிட்டனர். ஒவ்வொருவரும் தங்களுக்கான பிரிவையும் தேர்ந்தெடுத்துவிட்டனர்.

BiggBossTamil5 Raju becoming entertainer among housemates

முதற்கட்டமாக பிக்பாஸ் கேட்டுக்கொண்டபடி சமையல், பாத்திரம் கழுவுவது, பாத்ரூம் சுத்தம் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது ஆகிய பிரிவுகளின் கீழ் ஹவுஸ் மேட்ஸ் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களை இந்தப் பிரிவுகளின் கேப்டன்களாக இருக்கும், தாமாக முன்வந்த ஹவுஸ் மேட்ஸ் தேர்வு செய்திருக்கின்றனர்.

அதற்குள்ளாகவே பிக் பாஸ் வீட்டுக்குள் ஒருவர் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார் என்றால் அவர்தான் ராஜூ ஜெயமோகன். எந்தவித தயக்கமுமின்றி எடுத்த எடுப்பிலேயே அனைவரிடத்திலும் கலகலப்பாக பேசி கலாய்க்கும் ராஜூ தொடர்பான புரோமோ தான் ஒரே நாளில் 3 புரோமோக்களாக வெளியாகின.

இந்த மூன்று புரோமோக்களிலும் ராஜூ ஜொலிக்கிறார். ஒரு புரோமோவில், பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு ராஜூ, பிக்பாஸ் வீட்டின் ரூல்ஸ்களை காமெடியாக படித்துக் காட்டுகிறார். இன்னொரு புரோமோவில் நாடக நடிகையான தாமரை செல்வியை கதை சொல்லி அலற விடுகிறார்.

BiggBossTamil5 Raju becoming entertainer among housemates

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்புகளை எடுத்துக் கொள்ளச்சொல்லி பிக்பாஸ் கேட்கிறார். அதன்படி இதில் யார் எந்த பிரிவுக்கு கேப்டன் ஆகிறீர்கள்? என்று கேட்கும் போது தனக்கு பாத்ரூம் டீமுக்கு கேப்டனாக வேண்டும் என்று அதிரடியாக கூறி ராஜூ கவனம் ஈர்க்கிறார்.

இப்படி முதல் நாளே, மிடுக்காகவும் துடுக்காகவும் பேசும் ராஜூ, பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸை ஒருங்கிணைக்கும் ஒரு எண்டர்டெயினராக தற்போது ஃபார்ம் ஆகி இருக்கிறார். இயக்குனர் பாக்யராஜிடம் உதவியாளராக பணிபுரிந்த ராஜூ, டிவி சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: போடு வெடிய!!.. பிக்பாஸ் சீசன் 5-ல ‘இவங்களுக்கு’ Army ஆரம்பிக்க போறாங்களா? யார் இந்த அக்‌ஷரா?

தொடர்புடைய இணைப்புகள்

BiggBossTamil5 Raju becoming entertainer among housemates

People looking for online information on Abhinav, Akshara Reddy, பிக்பாஸ், விஜய் டிவி BBTamilSeason5, Biggbosstamil, BiggBossTamil5, Chinnaponnu, GrandLaunch, Ikky Berry, ImanAnnachi, Isaivani, Kamalhassan, Master Cibi, Raju, Thamarai Selvi, Varun, VijayTelevision will find this news story useful.