#LOVE : பிக்பாஸ் ரைசா இப்போது சிங்கிள் இல்லையாம்... வீடியோவில் காத்திருக்கு Ultimate சர்ப்ரைஸ்!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். இதையடுத்து இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் வந்தன. ஹரிஷ் கல்யான் நடிப்பில் இலான் இயக்கிய பியார் ப்ரேமா காதல் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார். இத்திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தனது வீடியோவில், 'இன்று நான் என் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை அறிவிப்பதாக சொல்லியிருந்தேன். ஆமாம், நான் காதலில் இருக்கிறேன்' என கூறி, மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் நடித்த வால்டரை அழைத்து, 'இவருடன் தான் நான் காதலில் இருக்கிறேன். ஹாஷ்டேக் லவ் படத்தில் நாங்க இருவரும் காதலிக்கிறோம். ஹாஷ்டாக் லவ் படத்தின் சார்பாக அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்' என அவர் தெரிவித்துள்ளார்.
Happy Valentines Day ❤️ pic.twitter.com/0YfjA5CFm8
— Raiza Wilson (@raizawilson) February 14, 2020