'பிக்பாஸ் ரைஸா ரிலேசன்ஷிப் ஸ்டேட்ஸ் பத்தி தெரிஞ்சுக்கணுமா ?' - பிரபல நடிகை தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல மாடலாக இருந்த ரைஸா, தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.  பிக்பாஸில் அவரது நடவடிக்கைகள் முதலில் விமர்சிக்கப்பட்டாலும் பின்னர் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு அதிகரித்தது.

TV Actress Nisha speaks about Bigg Boss Raiza's relationship status

இதனையடுத்து அவர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்த 'பியார் பிரேமா காதல்' படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த படம் அவருக்கு நல்ல  பெயரை பெற்றுத்தந்தது. சமீபத்தில் வெளியான 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது விஷ்ணு விஷாலுடன் இணைந்து 'எஃப்ஐஆர்', ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து 'காதலிக்க யாருமில்லை' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரைஸா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசும் பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான நிஷா, ரைஸா உன் ஃபிரெண்ட் தான, அவர் கமிட்டடா இல்ல, இல்ல சிங்கிளானு என்கிட்ட கேட்கிறாங்க. பிப்ரவரி 14 ஆம் தேதி அவளோட ரிலேசன்ஷிப் ஸ்டேட்டஸ் பத்தி சொல்லுவா'' என்று தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor