www.garudabazaar.com

எனக்கா 'ஸ்கெட்ச்' போடுறீங்க?... இப்போ தான் மனசுக்கு ரொம்ப 'நிம்மதியா' இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று நடைபெற்ற பந்து டாஸ்க்கில் அனைவரும் வலிமையான போட்டியாளர்களை விளையாட விட்டு சொதப்பி விட்டனர். சுரேஷை தவிர வேறு யாரும் இந்த விளையாட்டை புரிந்து கொள்ளவில்லை. ஆனால் அவரை முதல் ஆளாக வெளியேற்றி விட்டதால் அவரால் இந்த டாஸ்க்கில் பெர்பார்மன்ஸ் செய்ய முடியவில்லை.

Bigg Boss Tamil 4: Sanam Shetty can't be nominated next week

அதே நேரம் யாருமே எதிர்பாராத வகையில் சனம் ஷெட்டி-வேல்முருகன் ஜோடி, இந்த டாஸ்க்கில் வென்று சக போட்டியாளர்களின் ரத்த அழுத்தத்தை எகிற செய்தனர். எனினும் டாஸ்க்கில் வெற்றி பெற்றதும் சனமை, வேல்முருகன் கட்டிப்பிடித்தது கொஞ்சம் ஓவராக இருந்தது. இதையடுத்து வேல்முருகன், சனம் ஷெட்டி இருவரையும் அடுத்த வாரம் யாரும் நாமினேட் செய்ய முடியாது என்னும் வரத்தினை பிக்பாஸ் அருளினார்.

ஏற்கனவே ஆஜித் அந்த லிஸ்டில் இருப்பதால் அவரையும் போட்டியாளர்கள் நாமினேட் செய்ய முடியாது. கேப்டனாக இருப்பவரையும் நாமினேட் செய்ய முடியாது. இந்த வார இறுதியில் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார் என்பதால் 11 பேரும் மாற்றி,மாற்றி ஒருவரை,ஒருவர் நாமினேட் செய்து கொள்ள வேண்டியது தான்.

கடந்த வாரம் சனம் ஷெட்டியை அதிக பேர் நாமினேட் செய்தனர். தற்போது அவருக்கு இந்த பாஸ் கிடைத்து இருப்பதால், அவர் பிக்பாஸ் வீட்டில் நீடிப்பார் என எதிபார்க்கப்படுகிறது. சட்டென டென்க்ஷன் ஆகி சண்டை போட்டாலும், டாஸ்க்கில் முழுமையான அர்ப்பணிப்புடன் விளையாடுகிறார் என ரசிகர்களும் சனமிற்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Tamil 4: Sanam Shetty can't be nominated next week

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.