Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

BIGGBOSS: பிக்பாஸ் சீசன் 6-ல போட்டியாளராக பிரபல கமல் பட நடிகையா? செம்ம தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல நடிகை பங்கேற்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss season 6 contestant myna Nandhini Sources

Also Read | பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல VJ நடிகை? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சுமார் 100 நாட்கள் வரை இருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏராளமான போட்டிகள்  வழங்கப்படும்.

இப்படி அனைத்து சவால்களையும் கடந்து, கடைசி வரை இருக்கும் நபர்களில் ஒருவர், வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முன்னதாக, அந்த வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

Bigg Boss season 6 contestant myna Nandhini Sources

முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜூ ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றனர்.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதியில் அந்த வாரம் வெளியேறப் போவது யார் என்கிற அறிவிப்பை நடிகர் கமலஹாசனே அறிவிப்பார். மேலும் போட்டியாளர்கள் செய்த செயல்களை விமர்சிப்பார். வாராவாரம் ஒரு சிறப்பு தகவலையும், சிறந்த புத்தகங்களையும் ரசிகர்களுக்கு கமல்ஹாசன் பரிந்துரைப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bigg Boss season 6 contestant myna Nandhini Sources

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்பொழுதும் தமிழில் ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடைபெறும். கடந்த இரண்டு சீசன் மட்டும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை நடைபெற்றது.

சமீபத்தில் முடிந்த ஐந்தாவது சீசனும் கடந்த 4வது சீசனை போல் கடந்த அக்டோபர் மாதம் தான் தொடங்கியது.

பிக்பாஸ் சீசன் 6 தமிழ், வரும் அக்டோபர் 9 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும்  என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bigg Boss season 6 contestant myna Nandhini Sources

இந்நிலையில் இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல நடிகை மைனா நந்தினி கலந்து கொள்ள இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மைனா நந்தினி சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக நடித்திருந்தார்.

வெண்ணிலா கபடிக் குழு, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, விருமன் உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை & குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நந்தினி. இதை தொடர்ந்து இவர் சீரியல்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சரவணன் மீனாட்சி, பிரியமானவளே, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நந்தினி நடித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சியில் கலகலப்பான மைனா என்ற கிராமத்துப் பெண் வேடத்தில் நடித்து பிரபலமானவர் நந்தினி. அந்த சீரியலுக்குப் பிறகு அவரை மைனா நந்தினி என்றே பலரும் அழைத்து வருகின்றனர்.

Also Read | கமல் நடிப்பில் முழு வீச்சில் இந்தியன்- 2 படப்பிடிப்பு.. DOP ரவி வர்மன் ISC வெளியிட்ட சூப்பர் BTS!

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss season 6 contestant myna Nandhini Sources

People looking for online information on Bigg Boss season 6 contestant, Bigg Boss season 6 Tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Kamal Haasan, Myna Nandhini, Vijay Television will find this news story useful.