Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

கமல் நடிப்பில் முழு வீச்சில் இந்தியன்- 2 படப்பிடிப்பு.. DOP ரவி வர்மன் ISC வெளியிட்ட சூப்பர் BTS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு BTS போட்டோவை ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ISC வெளியிட்டுள்ளார்.

DOP Ravi Varman ISC Shared Indian 2 Movie Shooting Spot BTS Image

Also Read | போடு சரவெடிய.. கார்த்தி நடிக்கும்"சர்தார்".. வெளியான அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி!

கடந்த 1996-ஆம் ஆண்டு ஷங்கா் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த   படம் இந்தியன். ஏ.‌எம். ரத்னம் தயாரிப்பில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் இந்தியன்.

இந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

DOP Ravi Varman ISC Shared Indian 2 Movie Shooting Spot BTS Image

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

DOP Ravi Varman ISC Shared Indian 2 Movie Shooting Spot BTS Image

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளனர். இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் திருப்பதி நகரில் நடந்து வருகிறது.

DOP Ravi Varman ISC Shared Indian 2 Movie Shooting Spot BTS Image

சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன் தனது ரசிகர்களை சந்தித்த வீடியோக்கள் வெளியாகி இருந்தன. மேலும் கமலின் புதிய தோற்றம் குறித்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ISC தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு BTS புகைப்படத்தை Picture of the Day என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ravi Varman (@r_varman_)

Also Read | பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல VJ நடிகை? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

தொடர்புடைய இணைப்புகள்

DOP Ravi Varman ISC Shared Indian 2 Movie Shooting Spot BTS Image

People looking for online information on Indian 2, Indian 2 Movie Shooting Spot, Kamal Haasan, Ravi Varman, Shankar will find this news story useful.