ஆபத்தான பயணம்.. வாடகை காரில் சென்ற அனுபவம் பகிர்ந்த பிக் பாஸ் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. சுமார் 105 நாட்கள் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகென் ராவ் டைட்டிலை தட்டிச் சென்றார்.

Bigg Boss fame Riythvika shares her unsafe travel in cab service

முன்னதாக, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் டைட்டிலை வென்றதுடன், வலுவான, எளிமையான போட்டியாளராக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரித்விகா. தற்போது தனக்கு நேர்ந்த மோசமாக கார் பயணத்தின் அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார்.

பிரபல வாடகை கார் சேவை நிறுவனத்தின் காரில் பயணித்த அனுபவம் பற்றி ரித்விகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த கார் ஓட்டுநரின் புகைப்படம் மற்றும் விவரங்களை பகிர்ந்து, ‘மிகவும் ஆபத்தான பயணம், உபர் டிரைவர் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டார். அவரது காரும் மோசமான நிலையில் இருந்தது. பிரபலங்கள் இதுபோன்ற அனுபவங்களை சந்திப்பது இது முதன் முறையல்ல’ என ரித்விகா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 3 பிரபலமான சித்தப்பு என்றழைக்கப்படும் சரவணனின் குலதெய்வ கோவில் கும்பாபிஷேகத்தில் பிக் பாஸ் பிரபலங்களுடன் ரித்விகாவும் பங்கேற்றார். அடுத்ததாக அதிரம் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் ரித்விகா நடித்துள்ளார்.