தல அஜித்தை தொடர்ந்து சீயான் விக்ரம் படத்தில் நடிக்கும் பிக் பாஸ் பிரபலம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 28, 2019 10:52 AM
சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘துருவநட்சத்திரம்’ திரைப்படத்தில் பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்துக் கொண்ட நடிகை அபிராமி வெங்கடாச்சலம் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் அபிராமி. பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பாக தல அஜித் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்து வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும்.
இந்நிலையில், நடிகர் அஜித்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்திலும் அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா, சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்ய தர்ஷினி, பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
பிக் பாஸ் போட்டிக்கு செல்வதற்கு முன்பாகவே ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளை அபிராமி முடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, மலேசிய தமிழ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க அபிராமி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல், தமிழிலும் கதைகள் கேட்டு வருவதாக தெரிகிறது.