www.garudabazaar.com

தாராளமா 'குடுக்கிற' மாதிரி குடுத்துட்டு... கடைசில ஒரு 'செக்' வச்சாரு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸின் ராஜதந்திரம் மீண்டுமொருமுறை நேற்று நிரூபிக்கப்பட்டது. எந்த சண்டையும் இல்லாமல் ஒரு எவிக்ஷன் பிரீ பாஸை கொடுத்து போட்டியாளர்களை அடித்துக்கொள்ள வைத்து விட்டார். இதையடுத்து கடந்த வார கடந்து வந்த பாதை டாஸ்க்கில் நாமினேட் ஆனவர்கள் அனைவரும் இந்த பாஸை பெறுவதற்கு முயற்சி செய்யுமாறு அவர்கள் அனைவரையும் ஒரு ரூமிற்குள் பிக்பாஸ் அனுப்பி வைத்தார்.

Bigg Boss 4 Tami: Aajeedh Khalique gets eviction free pass

இதில் நாட்டாமையாக தன்னுடைய கடமையை செய்து 5 பேரை சுரேஷ் சக்கரவர்த்தி வெளியில் அனுப்பி வைக்க, கடைசியில் ஆஜித், ரம்யா, சுரேஷ் மூவரும் எஞ்சினர். இதில் சுரேஷின் மாஸ்டர் மைண்டை மிகவும் தாமதமாக கண்டுகொண்ட ரம்யா அவரை நாமினேட் செய்ய ஆஜித்தும் சேர்ந்து கொண்டார். தொடர்ந்து ரம்யா விட்டுக்கொடுக்க ஆஜித் அந்த பாஸை வின் செய்ததாக பிக்பாஸ் அறிவித்தார்.

இதன்படி அந்த பாஸ் தற்போது ஆஜித்திற்கு கிடைத்துள்ளது. இதனால் வரும் 10-வது வாரம் வரையில் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது. ஆனால் அப்படியே விட்டால் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் இருக்காது அல்லவா? அதனால் பிக்பாஸ் அதற்கு ஒரு செக் வைத்துள்ளார். அதாவது அந்த பாஸை ஆஜித்திடம் இருந்து வேறு யாராவது எடுத்து கொண்டால் அவர்களை யாராலும் நாமினேட் செய்ய முடியாது.

மொத்தத்தில் அந்த பாஸை யார் வைத்து இருக்கிறார்களோ அவரை யாராலும் நாமினேட் செய்ய முடியாது. இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ சனம் ஷெட்டி, சுரேஷ் சக்கரவர்த்தி இருவரில் யாராவது ஒருவர் அதை எடுத்து கொண்டால் அஜீத்தின் நிலை என்ன ஆகும்? எனசமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 4 Tami: Aajeedh Khalique gets eviction free pass

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.