www.garudabazaar.com

எல்லாரும் ஒன்னு கூடிட்டாங்க… கோபிக்கு அடுத்த சிக்கல்?... பாக்யலட்சுமி சீரியலில் பரபரப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்கியலட்சுமி சீரியலின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.

Bhakyalakshmi serial gopi is in problem viral episode

Also Read | KGF தயாரிப்பாளர்களோடு இணைந்த சுதா கொங்கரா… எதிர்பார்ப்பை எகிற வைத்த ஜி வி பிரகாஷ்!

பாக்கியலட்சுமி…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்களில் ஒன்று. இந்த தொடர் இதுவரை 360 க்கும் மேற்பட்ட எபிசோட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த தொடரில் சுசித்ரா, சதிஷ்குமார், திவ்யா சுரேஷ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் மையக் கதாபாத்திரங்களில் ஒன்றான செழியன் கதாபாத்திரத்தில் இதுவரை நடிகர் ஆர்யன் நடித்துவந்தார்.

கோபியின் தில்லுமுல்லுகள்…

இந்த சீரியல் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தன்னுடைய மனைவி பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்த கோபி, ராதிகாவுடன் உறவில் இருந்து வருகிறார். அது மட்டுமில்லாமல், பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டு, ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவையும் கோபி எடுத்துள்ளார். பாக்கியலட்சுமியை ஏமாற்றி எப்படியாவது விவாகரத்து வாங்கிவிட வேண்டும் என குறுக்கு வழிகளை மேற்கொண்டார். இது சம்மந்தமான நீதிமன்றக் காட்சிகள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தின.

Bhakyalakshmi serial gopi is in problem viral episode

ராதிகா பாக்கியலட்சுமி நட்பு…

விவாகரத்துக்காக வேண்டி, கோபி ஏகப்பட்ட நாடகங்களையும், பொய்களையும் பேசி பாக்கியலட்சுமி மற்றும் ராதிகா ஆகியோருக்கு இடையே, மிகப்பெரிய கேம் ஆடி வருகிறார். ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள். ராதிகாவுடன் பழக்கத்தில் கோபி இருக்கும் நிலையில், தோழி பாக்கியலட்சுமி தான் கோபியின் மனைவி என்பது, ராதிகாவுக்கு தெரியாது. இதையடுத்து பாக்கியலட்சுமியோடு ராதிகாவை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் வரும்போதெல்லாம் அதில் இருந்து எப்படியாவது தப்பித்து வந்தார் கோபி.

Bhakyalakshmi serial gopi is in problem viral episode

கோபி மேல் கோபமான குடும்பம்…

இந்நிலையில் இப்போது திடீரென பாக்கியலட்சுமி போலீஸாரால் கைது செய்யபட, அவரை மீட்பதற்காக குடும்பத்தினர் முயற்சி மேற்கொள்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் கோபி ராதிகாவோடு இருப்பதால் அவரை எவ்வளவோ தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் அவர் வரவில்லை. மறுநாள் வந்து பாக்கியலட்சுமி எங்கே எனக் கேட்க, அவர் மீது குடும்பத்தினர் கடும் கோபமாகின்றனர். ஏற்கனவே கோபியின் தில்லுமுல்லுகளை தெரிந்த அவரின் அப்பா கோபத்தின் உச்சிக்கே சென்று, கோபியை அறைந்துவிடுகிறார். இதனால் கோபியின் குடும்பமே இப்போது அவருக்கு எதிராக மாறியுள்ளது. இதனால் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Bhakyalakshmi serial gopi is in problem viral episode

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

எல்லாரும் ஒன்னு கூடிட்டாங்க… கோபிக்கு அடுத்த சிக்கல்?... பாக்யலட்சுமி சீரியலில் பரபரப்பு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bhakyalakshmi serial gopi is in problem viral episode

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Gobi, Vijay Television will find this news story useful.