www.garudabazaar.com

ஒருவாட்டி அப்படி 'செஞ்சா' பரவால்ல... ஒவ்வொரு வாட்டியும்னா எப்புடி?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் விடிய,விடிய மணிக்கூண்டு டாஸ்க் நேற்று நடைபெற்றது. இதில் அனிதா அணியினர் டாஸ்க்கை முடிக்க போகும் நேரத்திலும் பாலாஜி அணி எழுந்து வரவில்லை. இதையடுத்து தூக்கத்தில் இருந்த அவரை, படாதபாடு பட்டு எழுப்பி அழைத்து வந்தனர். ஆனால் அதற்கான பலன் தான் கிடைக்கவில்லை. 

BB Tamil 4: Why Balaji Murugadoss always doing Wrong things?

ஏனெனில் 3 மணி நேர டாஸ்க்கை 1 மணி நேரம் 26 மணி நேரத்தில் முடித்து விட்டு பாலாஜி தன்னுடைய அணியினருடன் வீட்டுக்குள் சென்று விட்டார்.  அதோடு இதை பெருமையாக வேறு சக போட்டியாளர்களிடமும் சொல்லி கொண்டார். இதைக்கேட்ட போட்டியாளர்கள் இந்த வாரமும் லக்சுரி பட்ஜெட் கோவிந்தா தானா? என்பது போல டென்ஷனாக பார்த்தனர். ஆனால் இது பெரிய விஷயமாக மாறவில்லை.

ஒருவேளை பிக்பாஸ் லக்சுரி பட்ஜெட்டில் கை வைத்தால் இது பூதாகரமாக வெடிக்கலாம். லக்சுரி பட்ஜெட் டாஸ்க் என்பதால் ஷிவானி, ரமேஷ், ஆஜீத் என இதுநாள்வரை அமைதியாக இருந்தவர்கள் தற்போது தீயாக இறங்கி வேலை செய்து வருகின்றனர். ஆனால் பாலாஜி செய்துள்ள வேலையால் லக்சுரி பட்ஜெட் மீண்டும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பத்திரம் டாஸ்க்கிலும் பாலாஜி இதேபோல விளையாடி லக்சுரி பட்ஜெட் பறிபோனது. அதே நேரம் போனமுறை தீபாவளி என்பதால் போட்டியாளர்கள் பிழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கமலும் இதை கண்டித்து இருந்தார். மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் நிகழுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தொடர்புடைய இணைப்புகள்

BB Tamil 4: Why Balaji Murugadoss always doing Wrong things?

People looking for online information on Balaji Murugadoss will find this news story useful.