பாகுபலி பிரபாஸ், முன்னணி இயக்குநரோடு இணையும் அடுத்த பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படம்!
முகப்பு > சினிமா செய்திகள்2015,17களில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய திரையுலகை மட்டுமல்லாமல் வெளிநாடுகளையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. ராஜமெளலி இயக்கிய இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் வெளியானதுடன், வசூலையும் வாரிக்குவித்தது.

இதைத்தொடர்ந்து 2019ம் ஆண்டு பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான பிரபாசின் சாஹோ திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடிக்கும் அடுத்த திரைப்படமும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது.
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை முன்னணி தெலுங்கு இயக்குநர் ராதா கிருஷ்ணா எழுதி இயக்குகிறார். ஶ்ரீ கிருஷ்ணம் ராஜு அவர்களின் கோபி கிருஷ்ணா மூவிஸ் நிறுவனம் வழங்கும் இந்த திரைப்படத்தை வம்சி, பிரமோத் மற்றும் UV Creations நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஶ்ரீகர் பிரசாத் படதொகுப்பு செய்யும் இந்த படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மும்மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்துக்காக அன்னபூர்ணா ஸ்டுடியோசில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்தே நடிக்கிறார்.