பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் பிரபாஸின் அதிரடி ஆக்ஷன் படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பாகுபலி’ புகழ் நாயகன் பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியான ‘சாஹோ’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Prabhas Saaho crosses 400 crores in Box office Worldwide

சுஜீத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான அதிரடி ஆக்ஷன் திரைப்படமான ‘சாஹோ’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். மேலும், நீல் நிதின் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃப், சங்கே பாண்டே, மந்திரா பேடி மற்றும் பலர் நடித்த இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது.

இந்த படத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இந்த படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி ரிலீசானது. ஹாலிவுட்டிற்கு நிகராக சாஹோ படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்‌ஷன் காட்சிகள், கார் சேசிங் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், இப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இப்படம் வெளியாகி 10 நாட்களில் உலகளவில் சுமார் ரூ.400 கோடி வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.