உதயநிதி - மிஷ்கின் - இளையராஜா கூட்டணியில் உருவான 'சைக்கோ' பாட்டு - தாய் மடியில்...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து உருவாகியிருக்கும் படம் 'சைக்கோ'. டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

Udhayanidhi, Mysskin, Ilaiyaraaja's Psycho , Thai Madiyil SOng is released

இந்த படத்தின் டீசர்  மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும் இந்த படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய உன்ன நெனச்சு மற்றும் நீங்க முடியுமா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த படத்தில் இயக்குநர் ராம், அதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தன்வீர் மிர் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகிற ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்துக்கு தாய் மடியில் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை கைலாஷ் கெர் பாடியுள்ளார். இயக்குநர் மிஷ்கினே இந்த  பாடலை எழுதியுள்ளார்.

உதயநிதி - மிஷ்கின் - இளையராஜா கூட்டணியில் உருவான 'சைக்கோ' பாட்டு - தாய் மடியில்... வீடியோ

Entertainment sub editor