www.garudabazaar.com

"ஆர்யா" நடித்த 'இந்த' திரைப்படம் .. பிரபல ஓடிடியில் வெளியாகிறதா? .. பரபரப்பு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வடசென்னையில் 1940-ல் தொடங்கி, 1980-கள் வரை மக்களின் வாழ்வோடு கலந்திருந்த குத்துச்சண்டை போட்டிகளை வளர்த்தெடுத்த மரபுதான் குத்துச்சண்டை பரம்பரை மரபு.

Arya Pa Ranjith Sarpatta Parambarai to be released on this OTT

இதை மையமாக வைத்து ஆர்யா நடிப்பில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் திரைப்படம் தான், 'சார்பட்டா பரம்பரை'.

ALSO READ: ப்ரியங்கா சோப்ராவின் சொந்த ரெஸ்டோரண்ட்..! .. அதுவும் நியூயார்க்கில்.. என்ன பெயர் தெரியுமா? Trending ஃபோட்டோஸ்!

சூப்பர் ஸ்டார் 'ரஜினிகாந்த்' நடிப்பில் 'கபாலி', 'காலா' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இந்த திரைப் படங்களின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா, கலையரசன், பசுபதி, ஜான் விஜய், சஞ்சனா நடராஜன் மற்றும் பலர் நடிப்பில் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தை இயக்கினார்.

சந்தோஷ் நாராயணன் இந்த திரைப்படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். இதில் குத்துச்சண்டை வீரராக, நடிகர் ஆர்யா, குத்துச்சண்டை பயிற்சி பெற்று நடித்திருக்கிறார். இந்த படப்பிடிப்புகள் முழுக்க முழுக்க வட சென்னை பகுதியில் ஒரே கட்டமாக நடந்த நிலையில், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் பற்றிய முக்கிய தகவல்கள் தற்போது தெரிய வந்திருக்கின்றன.

அதன்படி இந்த திரைப்படம், பிரபல 'ஓடிடி' தளமான 'அமேசான் ப்ரைம் வீடியோவில்' வெளியாகவுள்ளதாகவும், இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

ALSO READ: "சிம்பு.. யுவன்.. காளிதாஸ் ஜெயராம்!".. புது காம்போவா இருக்கே? சம்பவம் Loading! விஷயம் என்ன தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

Arya Pa Ranjith Sarpatta Parambarai to be released on this OTT

People looking for online information on Arya, Pa Ranjith, Pasupathi, SarpattaParambarai will find this news story useful.