'இறுதிச்சுற்று' படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கி வரும் படம் 'சூரரைப் போற்று'. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து குனீத் மோங்கா இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை நிகேத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.
எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில், காதலில் சொதப்புதவது எப்படி? வாயை மூடி பேசவும் படங்களில் நடித்த அர்ஜூனனின் இரட்டைக்குழந்தைகளான இலன் மற்றும் இயல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.