பரபரப்பு!! இளம் ஹீரோவோட திடீர் பிரேக் அப்.. வீட்லயே அடைபட்டிருக்கும் நடிகை?
முகப்பு > சினிமா செய்திகள்மும்பை : நடிகை மலைக்கா அரோராவும், அர்ஜுன் கபூரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகி தீயாக பரவி வந்த நிலையில், அர்ஜூன் கபூர் நச்சென்று முற்றுப்புள்ளி வைத்தார்.
அர்ஜுனை விட மலைக்கா அரோரா பெரியவர் என்பதால் இந்த காதலில் போனி கபூருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்பட்டது. இவர்கள்
இருவருக்கும் இடையில் 13 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்தது தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இவர்கள் இருவருக்குள் பிரிவு
ஏற்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளிவந்துள்ளன.
மலைக்கா அரோரா
நடிகை மலைக்கா அரோரா உயிரே படத்தில் இடம்பெற்ற ரயில் பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலில் ரயிலின் மேலே நின்று மலைக்கா அரோரோ போட்ட ஆட்டமும் மிகவும் பிரபலமானது. ஷாருக்கின் எவர்கிரீன் பாடல்களில் இதுவும் ஒன்று. இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்திருந்தார். திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து கணவரை பிரிந்தார். அதன் பிறகு தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூரை காதலித்து வந்தார்.
அர்ஜூன் கபூருடன் காதல்
கடந்த நான்கு வருடங்களாக அர்ஜூன் கபூருடன் மலைக்கா டேட்டிங்கில் இருந்தார். தற்போது இவர்களது உறவு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 6 நாட்களாக மலைக்கா வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்ற செய்தியும் வெளியாகியுள்ளன. அர்ஜூன் கபூரை விட்டு பிரிந்ததில் இருந்தே மலைக்கா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதேபோல அர்ஜூன் கபூரும் வெளியில் எங்கும் செல்லவில்லை என்றாலும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலைக்காவின் வீட்டிற்கு அருகில் உள்ளதனது தங்கை ரியா வீட்டிற்கு இரவு உணவிற்காக சென்றுள்ளார். ஆனால் அருகில் இருக்கும் மலைக்காவின் வீட்டிற்கு அவர் செல்லவில்லை. இவர்களது பிரிவு குறித்து வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.
சமந்தாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய ரெஜினா - மருத்துவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு
அர்ஜூனின் வயது 36, மலைக்காவின் வயது 48. இவர்கள் இருவரின் உறவு குறித்தும் வயது வித்தியாசம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தபோது, அதுகுறித்து அர்ஜூன் கபூர், இவ்வாறு விமர்சனங்கள் செய்பவர்கள்தான் தன்னுடைய புகைப்படம் எடுத்துக் கொள்ள அலை மோதுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இவர்களின் பிரிவு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் வயது வித்தியாசம் தான் இவர்களின் பிரிவுக்கு காரணம் என்றும்
பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், சமூகவலைதளங்களில் செய்திகளில் வந்த வதந்திகளுக்கு அர்ஜூன் கபூர் இன்ஸ்டாகிராமில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வதந்திகளுக்கு இடமில்லை. பத்திரமாக இருக்கவும். மக்களுக்கு நல்வாழ்த்துக்கள். அனைவரையும் நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆகவே இதன் மூலம் வதந்திகளுக்கு மட்டும் இல்லை, எங்க காதல் ரொம்ப ஸ்ட்ராங் யாராலும் பிரிக்க முடியாது என தெரியவந்துள்ளது.
பாவனிட்ட நீ இத பண்ணக் கூடாது! பிரியங்காவின் ஆர்டர்! அள்ளு விட்ருச்சே அமீருக்கு! BiggBoss5
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Raiza Wilson Opens Up About Her Break-up And Relationship
- அர்ஜுன் கபூருக்கு கொரோனா வைரஸ் | Actor Arjun Kapoor Tested For COVID Turns Stars Shock
- Popular Hero Shares Screenshot Of His Last Conversation With Sushant Singh Ft Arjun Kapoor | சுஷாந்த் சிங்குடன் கடைசியாக பேசிய ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந
- Arjun Kapoor Shares Last Chat With Sushant Singh Rajput And Emotional Note
- Hot And Stunning Actress Malaika Arora Shares A Sun-kissed Selfie And A Positive Message.
- Arjun Kapoor Shares A Throwback Picture On Varun Dhawan's Birthday
- Thalapathy Vijay's Massive Donation For Coronavirus Relief: State-wise Fund Break-up Released
- Arjun Kapoor Shares A Viral Video Of A Best Father On Twitter
- Popular Actor Breaks Down, Pens An Emotional Post For Late Mother Mona Shourie Kapoor Ft Arjun Kapoor
- Kamal Haasan's Indian 2 Actress Rakul Preet Bags Bollywood Movie With Arjun Kapoor
- The Official Trailer Of Arjun Kapoor And Kriti Sanon's Panipat
- Arjun Kapoor - Parineeti's Namaste England New Trailer
தொடர்புடைய இணைப்புகள்
- ஆலியா கொடுத்த 'முத்தம்' நல்லா இருந்துச்சி.. போட்டுடைத்த அர்ஜுன் கபூர்..! பாலிவுட்டில் பரபரப்பு
- 'ஒரு நாள் NIGHT-க்கு மட்டும் இவ்வளவா'... இளசுகளை கடுப்பேத்திய காதல் ஜோடி | Arjun Kapoor
- RAKUL PREET SINGH காதலில் விழுந்த JACKKY யாரு?
- Rakul மாப்பிள்ளை எங்கனு கொஞ்சம் சொல்லுங்கப்பா 😅 | Arjun Kapoor | Sardar Ka Grandson
- 2 States | Chennai is a real hotspot for these non-Tamil films - Slideshow
- 2 States | Ten Non-Tamil Movies That Rocked The Tinsel Town Last Year - Slideshow
- Mia Khalifa
- Sara Ali Khan
- Sara Ali Khan | Actresses in gorgeous outfits designed by India's renowed designer Sabyasachi - Slideshow
- Sara Ali Khan | When celebrities celebrated their fathers - Slideshow
- Sara Ali Khan - Photos
- Kareena Kapoor