உங்களின் மிகப் பெரிய ரசிகையிடமிருந்து மனம் நிறைந்த பேரன்புடன் - பிகில் நாயகியின் வாழ்த்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்றைய ட்விட்டரில் டாப் ட்ரெண்டிங்கில் இருந்த சொல் என்ன தெரியுமா? HBDTHALAPATHYVIJAY. ரசிகர்கள் ஒருபக்கம் தங்கள் தளபதிக்கு வாழ்த்துக்களைக் குவித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் திரைத் துறையைச் சேர்ந்த பலரும் தங்கள் வாழ்த்துக்களை சோஷியல் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் தொலைக்காட்சியில் விஜய் நடித்த படங்கள், மற்றும் படக்காட்சிகள் ஒளிபரப்பாகிய வண்ணம் இருந்தது.

amritha aiyer wishes thalapathy vijay happy birthday

இப்படி எல்லா தரப்பினரும் விரும்பும் விரும்பும் கலைஞனாக தளபதி விஜய் உள்ளார். சூழல் காரணமாக தன்னுடைய பிறந்த நாளை ஆரவாரமாகக் கொண்டாட வேண்டாம் என்று விஜய் அன்புக் கட்டளை இட்டும் அவரது ரசிகர்கள் இந்த 46-வது பிறந்த நாளினை மிகச் சிறப்பாகக் கொண்டாடிவிட்டனர்.

இந்நிலையில் பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்த அம்ருதா ஐயர் அவருடனான ஒரு வீடியோ கிளிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அழகான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளது, 

'இந்தத் தருணம் மட்டுமில்லை, உங்களுடன் ஒவ்வொரு கணமும் எப்போதும் என் நினைவில் பொக்கிஷமாக உள்ளது. என் தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...உங்களின் மிகப் பெரிய ரசிகையிடமிருந்து மனம் நிறைந்த பேரன்புடன்’ என்று நெகிழ்ச்சியாக வாழ்த்தியுள்ளார்

 

அம்ருதாவின் வாழ்த்துக்களை பார்த்த ரசிகர்கள் அவரைப் பாராட்டியுள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

amritha aiyer wishes thalapathy vijay happy birthday

People looking for online information on Amritha Aiyer, Bigil, HBD Vijay, Vijay will find this news story useful.