விஜய் பாடலுக்கு பிரபல நடிகரின் வேற லெவள் டான்ஸ்.! 5 காஸ்ட்யூம்.. 5 பாட்டுன்னு கலக்குறாங்க.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சதீஷ் ஆடியுள்ள வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

விஜய் பிறந்தநாளுக்கு சூப்பர் டான்ஸ் போட்ட நடிகரும் ஆங்கரும் | actor sathish and anchor bhavna dance video for vijay birthday goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடித்த துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றன. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, ஆர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நடிகர் சதீஷும், தொகுப்பாளினி பாவனாவும் விஜய்யின் வெவ்வேறு பாடல்களுக்கு நடனாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார். விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, 5 பாடல்களுக்கு 5 விதமான காஸ்ட்யூம்களுடன், நடனமாடும் இவர்களின் வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரல் ஹிட் அடித்துள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் பிறந்தநாளுக்கு சூப்பர் டான்ஸ் போட்ட நடிகரும் ஆங்கரும் | actor sathish and anchor bhavna dance video for vijay birthday goes viral

People looking for online information on Anchor Bhavna, Sathish, Vijay, Vijay birthday will find this news story useful.