வெற்றியின் V என்ற முதல் எழுத்தாகக் கொண்ட விஜய்க்கு..பிரபல இயக்குனரின் பாராட்டு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் இன்று தனது 46-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் அன்பை வாழ்த்துக்களாக்கி விஜய் மீது பொழிந்து வருகிறார்கள்.

Director Bharathiraja wishes Vijay very happy birthday

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா தன்னுடைய ட்விட்டரில் விஜய்க்கு நீண்ட வாழ்த்தினை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளது, ‘என் கலைப்பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை. இன்று வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின்இளைஞர்களின், சொத்தாக உலகமே,கொண்டாப்படும்"விஜய்க்கு" இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

காதலாகட்டும்,நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும் நையாண்டி, நக்கலுக்கான அந்த , உடல் பாவனை நடனத்தின் நளினம், சண்டைக் காட்சிகள், அதிலும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்த்து வைத்திருக்கின்ற, வெற்றியின் V என்ற முதல் எழுத்தாகக் கொண்ட விஜய்க்கு 46வது பிறந்த நாளில், எல்லா சிறப்பும் பெற்று, நீடூழி வாழ பாசத்துடன் வாழ்த்துகிறேன்’ என்று பாராட்டியுள்ளார்

 

தொடர்புடைய இணைப்புகள்

Director Bharathiraja wishes Vijay very happy birthday

People looking for online information on Bharathiraja, HBD Vijay, Vijay will find this news story useful.