www.garudabazaar.com

அமீர் & வெற்றிமாறனின் புதிய படம்.. கதை யாரு? டைரக்‌ஷன் யாரு?.. பரபரப்பு போஸ்டர்.. அமீர் விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 03, பிப்ரவரி 2022:- பொல்லாதவன் தொடங்கி, ஆடுகளம், விசாரணை, அசுரன், வடசென்னை என பல படங்களை இயக்கியவர் இயக்குநர் வெற்றிமாறன்.

Ameer Opens up about statement join hands with Vetrimaaran

விருதும் வெற்றிமாறனும்

இவற்றுள் ஆடுகளம், அசுரன் ஆகிய படங்கள் தேசிய விருதுகளை வென்றன. தனுஷ் நடிப்பிலான இந்த திரைப்படங்கள் வெகுமக்கள் மத்தியிலும் நன்றாகவே திரையரங்குகளில் ஓடி பாராட்டையும் குவித்த திரைப்படங்கள். இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இயக்குநர் அமீர் இணையக்கூடிய புதிய படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான போஸ்டர் அறிவிப்பு

இது தொடர்பாக 02.02.2022 அன்று வெளியான போஸ்டரில், தங்கம், அமீர், வெற்றிமாறன் மூவரின் புகைப்படத்துடன், “ஒரு திரைப்படம் தனி ஒருவரின் Vision தான். இன்னொருவரின்  Vision-னுடன் இணையும்போது அது இன்னும் அழகாகும். எனது அடுத்த படைப்பு விரைவில் தொடங்கப்படவிருக்கிறது” என்று இயக்குநர் அமீர் குறிப்பிடுவதாய் அந்த அறிவிப்பு இருந்தது.

Ameer Opens up about statement join hands with Vetrimaaran

அமீர் - வெற்றிமாறன் - தங்கம்

இயக்குநர் அமீர், முன்னதாக தனுஷ் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை திரைப்படத்தில் ராஜன் எனும் முதன்மை கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருந்தார். இதேபோல் தங்கம், தமது மரியாதைக்குரியவராக இயக்குநர் வெற்றிமாறனால் ஊடகங்களில் குறிப்பிடப்பட்டவர்.  

Also Read: கைகோர்க்கும் அமீர் & வெற்றிமாறன்!.. போஸ்டர்ல இருக்குற அந்த 3வது நபர் யாரு?! முழு விபரம்.

ரசிகர்களின் கேள்விகள்..

இந்நிலையில் இயக்குநர் அமீர் மற்றும் வெற்றிமாறன் இணையும் இந்த புதிய திட்டத்தில் கதை யாருடையதாக இருக்க போகிறது? வெற்றிமாறன் இயக்கப் போகிறாரா? தயாரிக்க போகிறாரா? தங்கத்தின் Role என்ன? மீண்டும் அமீர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க போகிறாரா? என அந்த போஸ்டர் அறிவிப்பு குறித்த பல கேள்விகள் தீவிர சினிமா ரசிகர்களிடம் எழுந்தன. அவற்றுக்கெல்லாம் தற்போது விடை கிடைத்துள்ளது.

Ameer Opens up about statement join hands with Vetrimaaran

மனம் திறந்த இயக்குநர் அமீர்..

ஆம், இயக்குநர் அமீர், தமது தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “மதிப்பிற்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி மற்றும் அனைஇத்து ஊடக நண்பர்களுக்கு... திரு. வெற்றிமாறன் - திரு.தங்கம் ஆகிய இருவரது கதை உருவாக்கத்தில் எனது திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றை துவக்க உள்ளேன் என்பதையும், இத்திரைப்படத்தின் மற்ற அனைத்து விபரங்களையும் விரைவில் உங்களுடன்  நேரில் பகிர்ந்துகொள்கிறேன் என்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வாழ்த்துக்களோடும், ஆதரவோடும், அன்போடும் அமீர்” என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

Ameer Opens up about statement join hands with Vetrimaaran

இதர தகவல்கள்..

அமீரின் அடுத்த படைப்புக்காக தங்கத்துடன் இணைந்து கதையாக்கத்தில் ஈடுபடவிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், இவை தவிர சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்பட பணியிலும், சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பிலான விடுதலை திரைப்பட உருவாக்க பணியிலும் ஈடுபட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: சிறப்பு! மிர்ச்சி சிவாவை அடுத்து.. களத்துல இறங்குன நடிகர் சூரி.. கலக்குறாங்கப்பா.. செம அப்டேட்

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ameer Opens up about statement join hands with Vetrimaaran

People looking for online information on Aadukalam, Ameer, Asuran, Asuran Tamil, அமீர், தங்கம், வெற்றிமாறன், Dhanush, GV Prakash Kumar, Santhosh Narayanan, Thangam, Vaadivaasal, Vetrimaaran, Visaranai will find this news story useful.