www.garudabazaar.com

லண்டனில் பிறந்தநாளை கொண்டாடிய அமலா பால்.. வைரலாகும் செம போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அமலாபால் லண்டனில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Amala paul birthday celebration at London tower bridge

Also Read | பிரபல OTT-யில் தனுஷ் நடித்த 'நானே வருவேன்'.. ரிலீஸ் எப்போ? முழு விவரம்

நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். பிரபு சாலமன் இயக்க விதார்த் மற்றும் தம்பி ராமையா மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்தில் மைனா எனும் கிராமத்து கேரக்டரில் நடித்த அமலா பால் பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.

Amala paul birthday celebration at London tower bridge

நடிகை அமலா பால் முன்னணி நடிகர்களான விக்ரம், விஜய், தனுஷ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருக்கிறார். குறிப்பாக விஜய்யுடன் அமலா பால் 'தலைவா' படத்திலும், தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி' படத்திலும், விக்ரமுடன் 'தெய்வத்திருமகள்' படத்திலும் அமலாபால் நடித்திருந்தார்.

Amala paul birthday celebration at London tower bridge

அமலா பால், அம்மா கணக்கு, ஆடை, Cadaver உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பாராட்டுக்கள் குவித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால். அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றுவார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

Amala paul birthday celebration at London tower bridge

சமீபத்தில் அமலாபால் மாலத்தீவு தீவில் இருந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் அமலாபால் நேற்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக லண்டனில் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள டவர் பாலத்தில் நின்று விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் பிறந்தநாளில் வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

Amala paul birthday celebration at London tower bridge

அமலாபால் சமீபத்தில் பாடகர் பவிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். அமலா பால் அடுத்து அதோ அந்த பறவை போல போன்ற படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பிருத்திவிராஜ் உடன் உருவாகி கொண்டிருக்கும் 'ஆடுஜீவிதம்' படத்தில் நடித்து வருகிறார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)

Also Read | Bigg boss 6 tamil : "நீயெல்லாம் பொண்ணா".. தனிப்பட்ட வஞ்சகமா..? ஷெரினா விஷயத்தில் தனலட்சுமியை சீறிய அசீம்.!

தொடர்புடைய இணைப்புகள்

Amala paul birthday celebration at London tower bridge

People looking for online information on Amala Paul, Amala paul birthday celebration, London, London tower bridge will find this news story useful.