The Legend
Maha others
www.garudabazaar.com

பிரபல OTT-க்கு ஷாருக்கான் தயாரிப்பில் ஆலியாபட் நடிக்கும் DARLINGS.. வெளியான கலக்கல் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகை ஆலியா பட்.

Alia Bhatt and Gaurav Verma Darlings Movie Trailer Netflix

Also Read | ஷாருக்கான் & தீபிகா படுகோன் நடிக்கும் 'பதான்'.. மிரட்டும் செம மாஸான மோஷன் போஸ்டர்!

இவர் பாலிவுட்டின் முக்கியமான இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் மற்றும் பிரிட்டிஷ் நடிகை சோனி ரஸ்தான் இவர்களின் மகள் ஆவார்.

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர் 2012ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து இவர் நடித்த Two States, Highway, Udta Punjab, Raazu, Gully boy போன்ற பல படங்கள் இவரை பாலிவுட்டின் முக்கிய இடத்தில் சேர்த்தது. சமீபத்தில் இவர் நடித்த  Gangubhai khaidwadi படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Alia Bhatt and Gaurav Verma Darlings Movie Trailer Netflix

குறிப்பாக இம்தியாஸ் அலியின் ஹைவே படம், ஏ. ஆர். ரஹ்மானின் இசையில் பெரிய வரவேற்பை பெற்றது. ஆலியாவை நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் உலகம் அறிய செய்தது.

கடைசியாக RRR படத்தில் சீதாவாக நடித்தார். ஆலியா பட் தற்போது ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன்  ஆகியோருடன் பிரம்மாஸ்திரா முதல் பாகம், ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்திலும் ஆலியா நடித்து வருகிறார்.

இந்த படங்களுக்கு முன்பே ஆலியா பட், ஷாருக்கான் தயாரிப்பில் டார்லிங்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. தன்னுடைய சொந்த கணவரை தனது அம்மாவின் துணையுடன் கடத்தும் பெண்ணாக ஆலியா பட் இந்த டிரெய்லரில் தோன்றியுள்ளார்.

Alia Bhatt and Gaurav Verma Darlings Movie Trailer Netflix

இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் நாள் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஷெபாலி ஷா, விஜய் வர்மா, ரோஷன் மேத்யூ முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஜஸ்மீத் கே ரீன் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஷாருக்கான் & கௌரி கான் தங்களது ரெட் சில்லி நிறுவனம் சார்பில் இப்படத்தை நெட்பிளிக்ஸ்காக தயாரித்துள்ளனர்.

Also Read | நடிகர் விஜய் சேதுபதியுடன் கத்ரீனா கைஃப்.. புதிய இந்தி படத்தின் வைரல் BTS போட்டோக்கள்!

பிரபல OTT-க்கு ஷாருக்கான் தயாரிப்பில் ஆலியாபட் நடிக்கும் DARLINGS.. வெளியான கலக்கல் டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Alia Bhatt and Gaurav Verma Darlings Movie Trailer Netflix

People looking for online information on Alia Bhatt, Darlings Movie, Darlings Movie Trailer, Gaurav Verma will find this news story useful.