www.garudabazaar.com

Ajithkumar : "62 நாடுகள்.. ஒன்றரை வருஷம் வேர்ல்டு டூரா?".. நடிகர் அஜித்குமாரின் செம ப்ளான்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். 90களின் தொடக்கத்தில் இருந்தே ஏகோபித்த ரசிகர்களை இன்றளவும் பெற்று வரும் நடிகர் அஜித்குமார், தமிழ் சினிமாவில் முதன்மை நடிகர்களுள் ஒருவராக விளங்கி வருகிறார்.

Ajithkumar Massive World Tour Trip for 62 countries 18 months

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகக் கூடிய திரைப்படங்களுக்காக ரசிகர்கள் எப்போதும் காத்திருக்கிறார்கள். அவருடைய ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. நடிகர் அஜித்குமார் அண்மை காலங்களாக H.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, அதனை தொடர்ந்து H.வினோத் இயக்கத்தில் வலிமை ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

வலிமை திரைப்படம் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது அஜித்குமார் நடிப்பில் மீண்டும் H.வினோத் இயக்கக்கூடிய புதிய திரைப்படத்துக்கு துணிவு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க இருக்கும் திரைப்படம் உருவாக இருக்கிறது, இந்நிலையில்தான் நடிகர் அஜித்குமார் வேர்ல்ட் டூர் போகப்போவதாக பிரத்தியேக தகவல்கள் கிடைத்துள்ளன. முன்னதாக நடிகர் அஜித் தனது BMW  பைக்கை எடுத்துக்கொண்டு   ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் மேற்கொண்டார்.

Ajithkumar Massive World Tour Trip for 62 countries 18 months

ஐரோப்பா நாடுகளில் பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம்  நடந்த பின்னர்,  நடிகர் அஜித்,  AK61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அங்கு படப்பிடிப்பை நிறைவு செய்த அஜித், தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

அதன் பின்னர் அஜித், தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக்,லே & கார்கில் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதேபோல் உத்தரகண்ட் மாநிலத்தின் இமயமலையில் அமைந்துள்ள கேதர்நாத் & பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவை தொடர்பான ஃபோட்டோக்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் தமது AK62 திரைப்பட பணி முடிந்த பின்பு, 7 கண்டங்களுக்கு, 62 நாடுகளுக்கு, 18 மாதங்கள், 3 சக பைக்கர்களுடன் இணைந்து வேர்ல்ட் டூர் போகப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 18 மாதங்கள் என்பது சுமார் ஒன்றரை வருடம்.

இப்படி ஒன்றரை வருடம் அஜித்குமார் வேர்ல்டு டூர் போகவிருப்பதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்களை அடுத்து, வைரலாகும் இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் ரசிகர்கள் ஒருபுறம் குஷி ஆகியுள்ளனர். இதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அஜித் இந்தியா முழுவதும் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

AJITHKUMAR : "62 நாடுகள்.. ஒன்றரை வருஷம் வேர்ல்டு டூரா?".. நடிகர் அஜித்குமாரின் செம ப்ளான்.! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajithkumar Massive World Tour Trip for 62 countries 18 months

People looking for online information on Ajith Kumar, AK61, AK62, Thunivu, Valimai will find this news story useful.