www.garudabazaar.com

bigg boss 6 tamil : ஜிபி முத்துவுக்கு கொடுக்கப்பட்ட “பிக் பாக்ஸ்”..!! திரும்பவும் ‘கமல் கேட்ட கேள்வி’.. 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

bigg box in bigg boss gp muthu kamalhassan bigg boss 6 tamil

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் கவனிக்கத்தக்க போட்டியாளராக மாறி இருக்கிறார் ஜிபி முத்து. முன்னதாக முதல் நாள் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டுக்குள் தனியே சென்றதாக சொல்லி புலம்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை மேலும் பயமுறித்திய நடிகர் கமல்ஹாசன் ஜாலியாக ரசித்தார். இதனை தொடர்ந்து தற்போது வார இறுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை இந்த கமல்ஹாசன், ஜிபி முத்துவிடம் பாதாம் கொடுத்து அது என்ன என்று கேட்க, ஜிபி முத்து பாதாம் என்று சொல்ல, இது தெரிகிறது .. ஆதாம் தெரியவில்லையா? என கிண்டல் அடித்தார். அப்போதும், ஆதாம் எங்கே இருக்கிறார்? என்று வெள்ளந்தியாக ஜிபி முத்து கேட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது திரும்பவும் ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோடில் ஜிபி முத்துவை கமல்ஹாசன் ஜாலியாக வறுத்தெடுப்பதை காண முடிகிறது.

இந்த முறை ஜிபி முத்துவுக்கு ஒரு போஸ்ட் பாக்ஸை பரிசாக கொடுக்கிறார்கள். அதை பார்த்தல் அதில் பிக் பாக்ஸ் என்று எழுதி இருக்கிறது. அதன் பெயர் என்ன கமல்ஹாசன் கேட்கும்பொழுது அதை பிக் பாக்ஸ் என்று ஜிபி முத்து கூறுகிறார். இந்த நிகழ்ச்சி பெயர் என்ன? என கமல் கேட்க, அதையும் பிக் பாக்ஸ் என ஜிபி முத்து சொல்ல, ‘இதுவும் பாக்ஸ் தானா’ என்று கமல் கலகலப்பூட்டுகிறார். ஜிபி முத்து பிக்பாஸை பிக்பாக்ஸ் அல்லது பிட் பாக்ஸ் என்று கூறுவது குறித்து இணையதளத்தில் பல்வேறு வைரல் கருத்துக்கள் சென்று கொண்டிருந்தன. தற்போது அது பிக் பாஸ் டீம் வரை தெரிந்திருக்கிறது என்பதை இந்த ப்ரோமோ  மூலம் காண முடிகிறது.

bigg box in bigg boss gp muthu kamalhassan bigg boss 6 tamil

People looking for online information on Bigg boss 6 tamil promobigg boss 6 tamil contestants listbigg boss tamil, Bigg boss tamil 6bigg boss season 6vijay tvbigg boss tamil promo, Bigg boss tamil 6bigg boss tamil season 6bigg boss tamil 6 contestantsrachitha mahalakshmi will find this news story useful.