www.garudabazaar.com
iTechUS

சபரிமலையில் இருந்து ‘துணிவு’ இயக்குநர் H.வினோத்.. வைரலாகும் புதிய ஃபோட்டோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Ajith Thunivu Director H. Vinoth from Sabarimala temple

பொங்கலை முன்னிட்டு 11.01.2023 அன்று  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌ 'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.+

Ajith Thunivu Director H. Vinoth from Sabarimala temple

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். துணிவு படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் துணிவு படத்தின் இயக்குனர் வினோத், தனது நண்பர் இயக்குனர் சரவணனுடன் சேர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து சென்றுள்ளனர்.

Ajith Thunivu Director H. Vinoth from Sabarimala temple

முன்னதாக மலைப்பாதையில் இயக்குனர் வினோத் நடந்து செல்லும் வீடியோ காட்சிகளையும்  ‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பு’ ஆகிய படங்களின் இயக்குநர் சரவணன் வெளியிட்டார். அந்த பதிவில், அஜித் சாரின் ‘துணிவு’ படம் மகத்தான வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இயக்குநர் வினோத் சபரிமலை யாத்திரை... சாமி சரணம் ஐயப்பா." என பதிவிட்டிருந்தார்.

Ajith Thunivu Director H. Vinoth from Sabarimala temple

இந்நிலையில் இயக்குநர் வினோத் சக நண்பர்கள் & இயக்குநர்களுடன் சபரிமலையில் இருந்தபடி அபிஷேக பூக்களை ஏந்தி போஸ் கொடுத்தபடி நிற்கும் ஃபோட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Thunivu Director H. Vinoth from Sabarimala temple

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Thunivu will find this news story useful.