www.garudabazaar.com
iTechUS

'துணிவு' படத்தில் இன்னும் 5 TRACK.. OST ரிலீஸ் எப்போ? ஜிப்ரான் கொடுத்த EXCLUSIVE தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Ghibran exclusive interview about Thunivu OST Sound Track

Also Read | மாறுபட்ட தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் & நானி.. இணையத்தில் வைரலாகும் வேறமாரி 'தசரா' BTS!

பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Ghibran exclusive interview about Thunivu OST Sound Track

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

Ghibran exclusive interview about Thunivu OST Sound Track

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Ghibran exclusive interview about Thunivu OST Sound Track

அதில், "துணிவு படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் ஸ்பெஷல் ட்ராக் இருக்கா?" என்ற கேள்விக்கு பதில் அளித்த இசையமைப்பாளர் ஜிப்ரான்,"கண்டிப்பா இருக்கு. படத்தில 3 ட்ராக் இருக்கு. No Guts No Glory, Madness, நான் அந்தோனிக்கிட்ட மட்டும் தான் பேசுவேன், அஜித் சார் டான்ஸ் ராப் போர்ஷன், அயோக்கியர்களின் ஆட்டம் என தீம் பாடல் இருக்கு. விரைவில் இதெல்லாம் வெளியாகும்" என ஜிப்ரான் கூறினார். துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | "KING அஜித்குமார்.. BLOCKBUSTER".. 'துணிவு' படம் பார்த்த PHOTO-வை பகிர்ந்து விக்னேஷ் சிவன் வைரல் பதிவு!

'துணிவு' படத்தில் இன்னும் 5 TRACK.. OST ரிலீஸ் எப்போ? ஜிப்ரான் கொடுத்த EXCLUSIVE தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ghibran exclusive interview about Thunivu OST Sound Track

People looking for online information on Ajith Kumar, Ghibran, Ghibran exclusive interview, Thunivu, Thunivu OST Sound Track will find this news story useful.