www.garudabazaar.com

மாநாடு படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையை கைப்பற்றிய சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: மாநாடு படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் கைப்பற்றியுள்ளார்.

Maanaadu Movie Remake Rights Telugu Dubbing Rights Sold

மாநாடு BLOCKBUSTER

2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு. இந்த Maanaadu 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்கியுள்ளார். இந்த படத்தை V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்தார். Time Loop பாணியில் அமைந்துள்ள மாநாடு படம் (25.11.2021) அன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியது. ஒரு காலச் சுழற்சியில் சிக்கிக் கொள்ளும் கதாநாயகன் அப்துல் காலிக்கின் வாழ்க்கையும், நீதிக்கு துரோகம் செய்து, அழிவுச் செயல்களில் ஈடுபடும்போது, ​​பிரபஞ்ச விதிகள் எப்படி உடைந்து போகின்றன என்பதே மாநாடு கதை. இந்த படம் 2021 டிசம்பர் 24 அன்று முதல் SonyLIV OTT- யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Maanaadu Movie Remake Rights Telugu Dubbing Rights Sold

ரீமேக் ரைட்ஸ்

சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபல விமர்சகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர்.  ரசிகர்க்ள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது. சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன், ஷங்கர், அல்போன்ஸ் புத்ரன் ஆகியோர் படத்தை பாராட்டியிருந்தனர். இந்த படம் முதல் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 14 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்தார்.

இயக்குனர் பா. ரஞ்சித் மனைவி சினிமாவில் அறிமுகம்.. என்ன ரோல்? இயக்குனர் யார் தெரியுமா?

Maanaadu Movie Remake Rights Telugu Dubbing Rights Sold

இந்நிலையில் மூன்றாம் நாள் வசூலாக 8 கோடி ரூபாயை மாநாடு படம் வசூலித்துள்ளதாக சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். முதல் மூன்று நாட்களில் 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இந்நிலையில் மாநாடு படத்தின் தெலுங்கு டப்பிங் மற்றும் அனைத்து மொழி ரீமேக் ரைட்ஸையும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் சிவகார்த்திகேயன் நடிக்கும் தமிழ்- தெலுங்கு மொழிகளில் உருவாகும் #SK20 படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

Maanaadu Movie Remake Rights Telugu Dubbing Rights Sold

மாநாடு படக்குழு

இந்த மாநாடு படத்தில் சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் வாகை சந்திரசேகர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன்,  மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

மௌனம் பேசியதே பட பாடலாசிரியர் காமகோடியன் இயற்கை எய்தினார்! திரையுலகுக்கு பேரிழப்பு..

Maanaadu Movie Remake Rights Telugu Dubbing Rights Sold

தொடர்புடைய இணைப்புகள்

Maanaadu Movie Remake Rights Telugu Dubbing Rights Sold

People looking for online information on சிவகார்த்திகேயன், மாநாடு, Maanaadu, Remake rights, Suresh Productions, Telugu Dubbing will find this news story useful.