www.garudabazaar.com

போடு!! செம்ம மாஸ்! தாமிரபரணி, ஆம்பள படங்களைத் தொடர்ந்து விஷால்32-ல் இணையும் பிரபலம்!..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்மையில் லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி-2, MS ஆனந்தன் இயக்கத்தில் சக்ரா ஆகிய திரைப்படங்கள் விஷால் நடிப்பில் வெளியாகியிருந்தன.

after thamirabarani and aambala movies prabhu to join in vishal32

இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால், து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால்31 படத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்த படத்துக்கு ‘வீரமே வாகை சூடும்’ என தலைப்பிடப்பட்டது.

after thamirabarani and aambala movies prabhu to join in vishal32

இதனிடையே ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்கும் எனிமி திரைப்படத்தின் அப்டேட்டும் வெளியானது. அதன்படி, ‘அவன் இவன்’ திரைப்படத்துக்கு பிறகு விஷால் மற்றும் ஆர்யா இணையும் எனிமி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

after thamirabarani and aambala movies prabhu to join in vishal32

இந்நிலையில் தான் விஷால் நடிக்கும் 32-வது திரைப்படத்தின் தகவல்கள் வெளியாகியிருந்தன. அறிமுக இயக்குனர் A.வினோத்குமார் இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுவருகிறது. வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில், ‘இளைய திலகம்’ நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

after thamirabarani and aambala movies prabhu to join in vishal32

ஏற்கனவே தாமிரபரணி, ஆம்பள உள்ளிட்ட திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதில் இடம்பெற்ற விஷால் மற்றும் பிரபு சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இதையடுத்து மீண்டும் விஷால் & பிரபு இணைந்து இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார்.

after thamirabarani and aambala movies prabhu to join in vishal32

இப்படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து  ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜாஇசையமைக்கிறார்.  பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.  மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் கவனித்துக்கொள்கிறார்.

Also Read: நடிகர் பிரபு!! எப்படி இருந்த மனுசன்.. அப்படியே “சின்னத் தம்பியாவே” மாறி இருக்காப்ள! Viral ஃபோட்டோ!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

after thamirabarani and aambala movies prabhu to join in vishal32

People looking for online information on Prabhu, Sunaina, Vishal, Vishal31, Vishal32 will find this news story useful.