www.garudabazaar.com

உலகப்புகழ் பெற்ற கேரள கோவிலில் சாமி தரிசனம் செய்த தமன்னா.. வைரல் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தமன்னா கேரளாவில் உள்ள பிரபல கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

Actress Tamannaah Bhatia Visit Kerala Guruvaayoor Temple

Also Read | மாளவிகா மோகனன்.. சரவெடி தீபாவளி போட்டோஷூட்.. வைரலாகும் TRADITIONAL லுக்!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. நடிகை தமன்னா தமிழில் கடைசியாக விஷாலின் ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்திருந்தார். நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்து ஓடிடியிலும் தடம் பதித்துள்ளார்.

அண்மையில் பப்ளி பவுன்சர்  படத்திலும் தமன்னா நடித்திருந்தார்.

இந்த 'பப்ளி பவுன்சர்' கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில்  இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படம் வெளியானது.

Actress Tamannaah Bhatia Visit Kerala Guruvaayoor Temple

  மேலும் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து ’பிளான் ஏ பிளான் பி’ படத்தில் தமன்னா நடித்திருந்தார்.

சஷாங்கா கோஷ் இயக்கிய இந்த ரொமான்டிக் காமெடி  படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நேரடியாக வெளியானது.‌

Actress Tamannaah Bhatia Visit Kerala Guruvaayoor Temple

தமன்னா நடிப்பில்  தெலுங்கில் 'That Is Mahalakshmi' படம் விரைவில் வெளிவர இருக்கின்றது. தற்போது, வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக 'போலோ ஷங்கர்' படத்திலும் தமன்னா நடிக்கிறார். தமன்னா தற்போது மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார். நடிகர் திலிப் நடிக்கும் 147வது படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா பாட்டியா நடிக்க உள்ளார். இந்த படத்தை அருண் கோபி இயக்க உள்ளார். சாம் CS இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணிபுரிகிறார். உதய் கிருஷ்ணா எழுத்தாளராக பணிபுரிகிறார். விநாயகா அஜித் இந்த படத்தை தயாரிக்கிறார். ஷாஜி குமார் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். சிலநாட்களுக்கு முன் கோட்டரக்கரா விநாயகர் கோயிலில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது.

Actress Tamannaah Bhatia Visit Kerala Guruvaayoor Temple

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் துவங்கி உள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் இயக்குனர் அருண் கோபியுடன் இணைந்து நடிகை தமன்னா குருவாயூர் கோவிலுக்கு சென்று அங்கு கிருஷ்ணரை சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

Also Read | விமல் நடிப்பில் புதிய படம் இயக்கும் விஜய் பட இயக்குனர்.. வர்ற பொங்கலுக்கு ரிலீஸா?

தொடர்புடைய இணைப்புகள்

Actress Tamannaah Bhatia Visit Kerala Guruvaayoor Temple

People looking for online information on Guruvaayoor Krishnan Temple, Kerala Guruvaayoor Krishnan Temple, Tamannaah, Tamannaah Bhatia, Tamannaah Bhatia Visit Guruvaayoor Krishnan Temple will find this news story useful.