KHS கேம்: யாருய்யா நேசமணி? அவரு என்ன கடவுளா? - இப்படி ஒரு கேள்வி கேட்ட ஹீரோயின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமூக வலைதளங்களில் உலகளவில் டாப் ட்ரெண்டான நேசமணி யார் என்பது தெரியாது என நடிகை நந்திதா ஸ்வேதா கூறியிருப்பது ரசிகர்களை அப்படியே ஷாக் ஆக்கியுள்ளது.

Actress Nandita Swetha asks who is Nesamani, plays Kiss Me Hug Me Slap Me with VJ Nikki

‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா, அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘எதிர் நீச்சல்’, விஜய் சேதுபதியின் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’,‘உப்ப் கருவாடு’,‘அசுரவதம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது விஜய் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘தேவி 2’ திரைப்படத்தில் பிரபு தேவா, தமன்னா ஆகியோருடன் இணைந்து  நந்திதா ஸ்வேதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், விஜே நிக்கியின்  Behindwoods-ன் Kiss Me Hug Me Slap Me செக்மெண்டில் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய நந்திதா, உலகளவில் ட்ரெண்டான கான்ட்ராக்டர் நேசமணி பற்றிய கேள்விக்கு ‘நேசமணி யாரு? கடவுளா அவரு?’ என்று பதிலளித்து கேமில் தோற்றார். விஜே-வுக்கு நச்சுனு 4 பஞ்ச் கொடுத்ததுடன் முத்தமிட்டு தனது டாஸ்க்கை முடித்தார்.

வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நந்திதா ஸ்வேதா, தற்போது நாயகியை மையமாக கொண்டு உருவாகும் IPC 376 என்ற படத்தில் போலீசாக நடித்து வருகிறார்.

KHS கேம்: யாருய்யா நேசமணி? அவரு என்ன கடவுளா? - இப்படி ஒரு கேள்வி கேட்ட ஹீரோயின்! வீடியோ