நேசமணிக்கு அரசு வேலை - முதல்வர் எடப்பாடியின் அறிவிப்புக்கு பிரபல நடிகர் மகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா நடிப்பில் வெளியான ‘ஃபிரெண்ட்ஸ்’ திரைப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலுவின் நேசமணி என்ற கதாபாத்திரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

EPS govt has announced Government job for Nesamani, Actor Siddharth pray for Nesamani

சிவில் இஞ்சினியரிங் லேனர்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில், சுத்தியல் குறித்து ஒருவர் இது என்ன என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் அது டங் டங் என்று சத்தம் எழுப்பும், காண்ட்ராக்டர் நேசமணியின் தலையில் விழுந்து அவர் பாதிக்கப்பட்டார் என நகைச்சுவையாக ஒரு ட்வீட்டை பகிர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய நெட்டிசன்கள், உலகளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர்.

மீம்ஸ்களின் தலைவனாக வலம் வரும் நடிகர் வடிவேலுவின் சில கதாபாத்திரங்களும், அது ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பதையும் யாராலும் மறுக்க முடியாது. அப்படியான நேசமணி கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், கோலிவுட் பிரபலங்கள் பலரும் சுத்தியலால் தாக்கப்பட்ட நேசமணி உடல்நலம் பெற வேண்டி ட்வீட்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், காண்ட்ராக்டர் நேசமணி குணமடைய வேண்டி நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாதிக்கப்பட்ட நேசமணிக்கு முதல்வர் எடப்பாடி அரசு வேலை வழங்குவதாக அறிவித்த செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. மீண்டு வா நேசமணி’ என ட்வீட் செய்துள்ளார்.

நடிகர் வடிவேலு நடிப்பில் சமீபத்தில் திரைப்படங்கள் ஏதும் வெளியாகாத நிலையிலும், அவரது கதாபாத்திரம் ஒன்றை ரசிகர்கள் காலம் தாண்டி கொண்டாடி வருகின்றனர்.