www.garudabazaar.com

எந்த ஆண்களை பிடிக்கும்... கருப்பா? சிவப்பா? மாநிறமா? மாளவிகா மோகனன் அளித்த 'நச்' பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: மாளவிகா மோகனிடம் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் கேட்ட கேள்விக்கு மாளவிகா மோகனன் நச் பதில் அளித்துள்ளார்.

Actress MALAVIKA MOHANAN's TWITTER Question Answer SESSION

வலிமை படத்தின் மரண மாஸ் பஸ் ஃபைட் காட்சி! போனி கபூர் வெளியிட்ட புதிய PROMO வீடியோ

மாளவிகா மோகனன், தற்போது தனுசுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாக உள்ளது. நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார்.

இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

பட்டம் போலே எனும் 2013 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.  கேரளாவை சார்ந்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தோன்றியிருந்தார்.

Actress MALAVIKA MOHANAN's TWITTER Question Answer SESSION

இந்த பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்.

சமீபத்தில் மாலத்தீவில் சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன், மாலத்தீவில் எடுக்கப்பட்ட அவரது சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் இணயத்தில் ட்ரெண்ட் ஆகின. இந்த புகைப்படங்களை தனது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாளவிகா மோகனன் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்கள் டிவிட்டரில் 50000 லைக்குகளை தாண்டின.

Actress MALAVIKA MOHANAN's TWITTER Question Answer SESSION

இந்நிலையில் டிவிட்டரில் ரசிகர்களுடன் நடிகை மாளவிகா மோகனன் கலந்துரையாடினார். ரசிகர்களின் கேள்விக்கும் நடிகை மாளவிகா பதில் அளித்தார்.

அல்லு அர்ஜூன்  பற்றிய கேள்விக்கு மாஸ் என பதில் அளித்தார். மேலும் மகேஷ் பாபுவுடன் நடிக்க ஆவலாக இருப்பதாகவும் பதில் அளித்தார்.

தனுஷ் உடன் நடித்த அனுபவம் பற்றிய கேள்விக்கு, மாஸ்டர்கிளாஸ் எனவும், தனுஷ் உடன் நடிக்கும் போது நிறைய கற்றுக்கொண்டதாகவும் கூறினார். 

விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆவலாக இருப்பதாகவும், ஒரு காதல் கதையில் விஜய்யுடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் மாளாவிகா மோகனன் கூறினார்.

Actress MALAVIKA MOHANAN's TWITTER Question Answer SESSION

மேலும் ஒரு ரசிகர் எந்த ஆண்களை உங்களுக்கு பிடிக்கும்... கருப்பா? சிவப்பா? மாநிறமா? ரசிகர் கேட்ட கேள்விக்கு, குறிப்பாக பாலின அடிப்படையில் மனிதர்களுக்கு (பெண்களுக்கு) எதிராக பாலின அடிப்படையில் பாரபட்சமாகவோ அல்லது பாகுபாடு காட்டாத ஆணை விரும்புவேன் (The non-sexist ones) என கூறி நச் என பதில் அளித்துள்ளார்.

சிக்ஸ் பேக்கில் நடிகை ரகுல் ப்ரித் சிங்! சாப்பிடாமல் ரொம்ப கஷ்டப்பட்டு வச்சிருக்காங்க போல

தொடர்புடைய இணைப்புகள்

Actress MALAVIKA MOHANAN's TWITTER Question Answer SESSION

People looking for online information on Allu Arjun, மாளவிகா மோகனன், Dhanush, Malavika Mohanan, Vijay will find this news story useful.