'சிறந்த நடிப்பினை அளித்து மகிழ்விப்பேன்' - நடிகர் சூரி உணர்ச்சிகரமான பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல காமெடி நடிகராக ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் நடிகர் சூரி. அவருக்கு இன்று(ஆகஸ்ட் 27) பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Actor Soori says thanks to fans for Birthday wishes

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் சூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''அனைவருக்கும் வணக்கம், நான் நடிகனாக அறிமுகமான நாள் முதல் இன்று வரை என்னை ஆதரித்து வரும் அனைவருக்கும் எனது நன்றிகள்.

இன்று என் பிறந்த நாளை வாழ்த்துக்களால் அலங்கறித்து அளவில்லா அன்பால் திக்குமுக்காடு வைத்த உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.இன்று நான் ஒரு நடிகனாக வெற்றி பெற்றதில் பெரும்பங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், எனது ரசிகர்கள், என் நண்பர்களுக்கும் உண்டு.

அவர்கள் அனைவருக்கும் என் இதயம்கனிந்த நன்றி. உங்களது ஆதரவினாலும், அன்பினாலும் நான் மேலும் மேலும் எனது சிறந்த நடிப்பினை உங்களுக்கு அளித்து மகிழ்விப்பேன். என்றும் அன்புடன், சூரி'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Soori, Birthday