www.garudabazaar.com

கந்தசஷ்டி கவசம் சர்ச்சை - நடிகர் ரஜினி சொல்லிய ப்ளார் கருத்து.! 'ரசிகர்கள் ட்ரெண்டிங்.'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினி, அண்மையில் எழுந்த கந்தசஷ்டி கவசம் தொடர்பான சர்ச்சை குறித்து பளீச் கருத்து தெரிவித்துள்ளார். 

கந்தசஷ்டி கவசம் சர்ச்சை - நடிகர் ரஜினிகாந்த் கருத்து | Actor Rajinikanth blasts on Recent Kanda sasti Kavasam Controversy

அண்மையில் முருகனை துதித்து பாடும் கந்தசஷ்டி கவசம் தொடர்பாக அவதூறான கருத்துக்களை பரப்பிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து திரைத்துறையினர், முருக பக்தர்கள் என பலர் அதற்கு எதிரான கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் இவ்விவகாரத்தில் அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. 

கந்தசஷ்டி கவசம் சர்ச்சை - நடிகர் ரஜினிகாந்த் கருத்து | Actor Rajinikanth blasts on Recent Kanda sasti Kavasam Controversy

இந்நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கந்தசஷ்டி கவசம் விஷயத்தில் நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ''கந்தசஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்க செய்த, அந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி, செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்..ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே.!! கந்தனுக்கு அரோகரா.!! என பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் இதை ட்ரெண்ட் அடித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

கந்தசஷ்டி கவசம் சர்ச்சை - நடிகர் ரஜினிகாந்த் கருத்து | Actor Rajinikanth blasts on Recent Kanda sasti Kavasam Controversy

People looking for online information on Kanda Sasti Kavasam, Rajinikanth will find this news story useful.