Reliable Software
www.garudabazaar.com

Video: ஆரியின் viral சிலம்பாட்டம்.. ரசிகர்கள் பற்றி சொன்ன 'உருகவைக்கும்' அந்த விஷயம்.. என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Behindwoods Gold Icons-ன் டெலிவிஷன், டிஜிட்டல் மற்றும் சோஷியல் விருதுகள் விழாவில் ஆரிக்கு விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்ட பிறகு ஆரி பகிர்ந்துள்ள உருக்கமான விஷயங்கள் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.

Aari emotinal message and salute to fans Behindwoods awards video

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் டைட்டில் கார்டு வென்ற, நடிகர் ஆரிக்கு, மோஸ்ட் செலிபிரேட்டடு பெர்சன் ஆன் ரியாலிட்டி டெலிவிஷன் (Most Celebrated Person On reality Television) விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை நடிகர் ரோபோ ஷங்கர் வழங்க  ஆரி பெற்றுக்கொண்டார்.

Aari emotinal message and salute to fans Behindwoods awards video

இதுபற்றி பேசிய ஆரி, “நான் வரலாறு படைக்கவில்லை. நேர்மையாக இருந்தால், உழைத்தால் அவர்களுக்கு ஒரு இடம் இருக்கிறது என்பதை 16 கோடி மக்கள் நிரூபித்துள்ளனர். இதனால் மக்களை நினைத்து தான் பெருமை கொள்கிறேன். எனக்கு தனிப்பட்ட பெருமை இல்லை. நான் ஜெயித்து கப் வாங்கும் வரையில் தாங்கள் தூங்கவில்லை என கூறி கண்கலங்க வைத்தார்கள். அத்தனை கோடி மக்களுக்கும் பெரிய வணக்கம், நன்றி” என்று உருக்கமாக பேசினார்.

Aari emotinal message and salute to fans Behindwoods awards video

மேலும் ஆரி, ஆச்சர்யப்படும் விதமாக சிலம்பாட்டம் ஆடி ஸ்டேஜை தெறிக்கவிட்டார். ஆரி இவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் கம்பு சுத்துவார் என்பது பலருக்கும் வியப்பாக இருந்தது. தொடர்ந்து பிஹைண்ட்வுட்ஸ்க்கு நன்றி சொன்ன ஆரி, ஒரு விஷயத்தை பதிவு செய்தார். அதில், “ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்களை உங்கள் இன்ஸ்டாவில் , ட்விட்டரில் பதிவிட்டு உங்கள் மார்க்கெட் மதிப்பை குறைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் அவரவர் பக்கத்தில் போட்டுக்கொள்ளட்டும் என்றார் ஒருவர். ஆனால் என்னை கொண்டாடும் மக்களை நான் கொண்டாட வேண்டும். அதனால் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை என் பக்கத்தில் தான் பதிவிடுவேன். அதை நான் தான் செய்ய முடியும்.

Aari emotinal message and salute to fans Behindwoods awards video

அம்பெடுத்து வில்லை நாணில் கட்டினால் பின்னாடி போய் தான் முன்னாடி செல்லும். பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த ஒவ்வொரு நாளும் ஓட்டு போட்டு அன்போடு ரசிகர்கள் செய்த அத்தனைக்கும்” என்று சல்யூட் அடித்து ரசிகர்களை உருக வைத்தார்.

VIDEO: ஆரியின் VIRAL சிலம்பாட்டம்.. ரசிகர்கள் பற்றி சொன்ன 'உருகவைக்கும்' அந்த விஷயம்.. என்ன தெரியுமா? வீடியோ

Aari emotinal message and salute to fans Behindwoods awards video

People looking for online information on Aari, BehindwoodsAwards, BehindwoodsGoldIcons will find this news story useful.