"13 வருஷம்... ஆச்சு".. இன்னும் பேசுரோம் அதாங்க படைப்பு! ட்ரெண்டாகும் 'சுப்ரமணியபுரம்'!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம். 'சுப்ரமணியபுரம்'. இன்றுடன்  வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து படம் குறித்த நினைவுகளை அந்த படத்தின் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

13 years of subramiapuram movie calibration sasikumar tweet

நடிகர் ஜெய், சமுத்திரக்கனி, சசிகுமார் ஸ்வாதி மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் இதே நாளில் வெளியானது.  இந்தப்படத்தின் பாடல்கள், பின்னணி இசை, பேசப்பட்ட கதைக்கரு என அனைத்து ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

13 years of subramiapuram movie calibration sasikumar tweet

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் சுப்பிரமணியபுரம் படத்தை பார்த்துதான் தனக்கு 'கேங்ஸ் ஆப் வாசிபூர்' படம் எடுத்ததற்கு இன்ஸபிரேஷனாக இருந்தது என்று ஒருமுறை தெரிவித்திருந்தார் அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது இப்படம்.

13 years of subramiapuram movie calibration sasikumar tweet

தற்போது  சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த படத்தின் நடிகர்கள் படம் குறித்து நினைவுகளைப் பகிர்ந்து வருகிறன்றர். இப்படம் குறித்து சசி குமார், " காலம் கடந்தும் நினைவு கூறப்படுவதுதான் ஒரு படைப்புக்கான கெளரவம். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி" என ட்வீட் செய்துள்ளார்.

13 years of subramiapuram movie calibration sasikumar tweet

People looking for online information on Jai, M Sasikumar will find this news story useful.