IndParty
www.garudabazaar.com

Video: இதுதானே 'உங்க' பிளான்... ஓபனாக பேசி 'கெத்து' காட்டிய அனிதா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் குரூப்பிஸம் இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலத்தான். நேற்று இது பட்டவர்த்தனமாக தெரிய வந்தது. நிஷா, அனிதா இருவரும் ஒரே விஷயத்தை தான் செய்தனர். ஆனால் நிஷா சிறந்த பெர்பார்மராக தேர்வு செய்யப்பட்டார். அனிதா ஒர்ஸ்ட் பெர்பார்மராக தேர்வு செய்யப்பட்டு ரமேஷுடன் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Anitha and Jithan Ramesh gone Jail, Netizens Reacts

இதுகுறித்து அனிதா, ரியோவிடம் அர்ச்சனா அக்காவோட அப்பா குறித்து பேச வேண்டாம் என சொல்லியும் கூட நிஷா அதை பேசுனாங்க. அப்புறம் ஏன் நிஷா அக்கா பேர நீங்க ஏன் சொல்லல அவங்கள பெஸ்ட் பெர்பாமர்னு சொல்றீங்க என கேள்வி கேட்டார். இதற்கு பதில் சொல்ல திணறிய ரியோ சப்போர்ட்டுக்கு யாராவது வாங்க என வெளிப்படையாகவே அழைத்தார்.

இதையடுத்து நிஷா ஆவேசமாக தன்னுடைய கருத்துக்களை எடுத்து வைத்தார். பாலாஜி சொல்லித்தான் நான் ரோபோக்களுக்கு பெயர் வைத்தேன் என அனிதா சொல்லியும் கூட இந்த பிரச்சினை முடியவில்லை. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அனிதாவுக்கு தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர். மேலும் கமல் இதுகுறித்து வெளிப்படையாக பேச வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Anitha and Jithan Ramesh gone Jail, Netizens Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.