www.garudabazaar.com

வட இந்தியாவில் 'மாநாடு' படம் ஹிட்டா? பட வினியோகஸ்தர் சொன்னது என்ன? வைரலாகும் டிவீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்கியுள்ளார். இந்த படத்தை V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்தூள்ளார்.

Maanaadu Movie North India Distributor about Film Collection

சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் வாகை சந்திரசேகர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன்,  மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Maanaadu Movie North India Distributor about Film Collection

Time Loop பாணியில் அமைந்துள்ள மாநாடு படம் வியாழன் அன்று (25.11.2021) உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபல விமர்சகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன் ஆகியோர் படத்தை பாராட்டியிருந்தனர். ரசிகர்க்ள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றுள்ளது. 

Maanaadu Movie North India Distributor about Film Collection

வியாழக்கிழமை வெளியான இந்த படம் முதல் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 14 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்தார். இந்நிலையில் மூன்றாம் நாள் வசூலாக 8 கோடி ரூபாயை மாநாடு படம் வசூலித்துள்ளதாக சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். முதல் மூன்று நாட்களில் 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

Maanaadu Movie North India Distributor about Film Collection

இந்நிலையில் இந்த படம் வட இந்தியாவில் எப்படி ஓடுகிறது என்பதை வட இந்திய வினியோகஸ்தரான UFO Cine Media Network அதிகாரப்பூர்வமாக டிவீட் செய்து அறிவித்துள்ளது. அதில் "மாநாடு இந்த ஆண்டின் பிளாக்-பஸ்டர் திரைப்படம்! மாநாட்டின் வட இந்திய விநியோகஸ்தர் என்ற முறையில், இப்படம் மிகப்பெரிய அன்பையும் மரியாதையையும் பெற்றுள்ளது மற்றும் வட இந்தியா முழுவதும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியும் அடைகிறோம்". என தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Maanaadu Movie North India Distributor about Film Collection

People looking for online information on Maanaadu, Maanaadu Box Office, Silambarasan TR, Suresh Kamatchi, Venkat Prabhu will find this news story useful.