Reliable Software
www.garudabazaar.com

"My Bad.. எப்படி மிஸ் பண்ணேன்?".. சுட்டிக்காட்டிய பிரேம்ஜி.. ஃபீல் பண்ணிய யுவன்.. நடந்தது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ள மலேசியா டு அம்னீசியா திரைப்படம் ZEE5-ல் வெளியாகவுள்ளது.

yuvan release a movie trailer premji remind his musical

இந்த படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இயக்குநர் கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி இசையிலும் கலக்குவார் என்பதை இந்த படத்தில் அவர் இசையமைக்கும் செய்தியில் இருந்தே பலரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

yuvan release a movie trailer premji remind his musical

அவரது இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளன.

இந்த படத்தின் ட்ரெய்லரை தமது ட்விட்டரில் வெளியிட்ட இசையமைப்பாளர் படம் வரும் 28-ஆம் தேதி முதல் ZEE5-ல் ஒளிபரப்பாவதாக தெரிவித்திருந்தார். அத்துடன் படக்குழுவினர் அனைவரையும் டேக் செய்திருந்தார். ஆனால் இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்த பிரேம்ஜி, ‘தலைவா இது என்னோட மியூசிக் தான். ஆனால் நீங்கள் என்னை டேக் செய்யவே இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்த யுவன் ஷங்கர் ராஜா, “அட இதை நான் தெரிந்திருக்கவில்லையே.. எப்படி இதை நான் கவனிக்க தவறினேன்” என ட்வீட் பதிவிட்டுள்ளார். இயக்குநரும் பிரேம்ஜியின் சகோதரருமான வெங்கட் பிரபு சிம்பு நடிப்பில் இயக்கியுள்ள மாநாடு திரைப்படத்தில் பிரேம்ஜி நடித்துள்ளார்.

கங்கை அமரனின் மகனான பிரேம்ஜியும், கங்கை அமரனின் சகோதரரான இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் இவ்வாறு ட்விட்டரில் இயல்பாக உரையாடிக் கொண்டது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ALSO READ: "கொரோனா ரிப்போர்ட் கேட்ட பேய்ங்களுக்கு" - கங்கனா காட்டம்.. வைரல் வீடியோ & screenshot!

தொடர்புடைய இணைப்புகள்

yuvan release a movie trailer premji remind his musical

People looking for online information on Premji Amaran, Premji amaren, Yuvan Shankar Raja will find this news story useful.