கொரோனா பாதிப்பால் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியுட் மருத்துவமனையில் பெண் பாடலாசிரியர் அனுமதி!
முகப்பு > சினிமா செய்திகள்இந்தியாவில் கொரோனா தொற்று நோயின் தாக்கம் பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது.
தற்போது இந்தியாவில் கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் பரவிவருகிறது. இரண்டாவது அலை தாக்க தொடங்கியதிலிருந்து எண்ணற்ற பிரபலங்களும் சாதாரண மக்களும், ஏழை, பணக்காரர்கள் என்ற எந்த வித்தியாசமும் இன்றி அனைவருக்கும் கொரோனா பாதித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தை பொருத்தவரை கொரோனா பரவும் விதத்தை கட்டுப்படுத்துவதற்காக சமூக இடைவெளி, தனிமனித இடைவெளி உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் கவனத்தை செலுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படுகின்றன. இன்னொருபுறம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதனிடையே பலரும் கொரோனா தாக்கத்தால் மருத்துமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்கத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்த தம் அனுபவத்தை இயக்குனர் வசந்தபாலன் தொடர்ச்சியாக தன்னுடைய வலைப்பக்கத்தில் எழுதி வந்தார்.
இந்த நிலையில்தான் தமிழ் திரைத்துறையில் பாடலாசிரியராகவும் இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராகவும் இருந்து பாரதிராஜா இயக்கிய சீரியல் ஒன்றில் பாடல் எழுதிய தேன்மொழி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சக பாடலாசிரியர்கள் பலரும் அவர் மீண்டு வருவதற்கு நம்பிக்கை வார்த்தைகளை கூறி வருகின்றனர்.
வந்தவாசியை சொந்த ஊராகக் கொண்ட பாடலாசிரியர் தேன்மொழி தாஸ், சுமார் ஐம்பது பாடல்கள் வரையில் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: திடீரென மருத்துவமனையில் விஜயகாந்த்!!.. கேப்டனுக்கு என்ன ஆச்சு? வெளியான பரபரப்பு அறிக்கை!
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- VIDEO: Jacqueline - கெஞ்சி பாக்குறேன்.. Cook With Comali-ல நானும்.. | Rakshan
- 🔴VIDEO: Pugazh-அ பிடிக்கவே பிடிக்காதுனு சொன்ன Jacqueline.. அவரோட Reply என்ன தெரியுமா? | CWC-2
- Jacquline சொன்ன Surprise, Shock-ஆன ரசிகர்கள், என்னவா இருக்கும்..? | Pugazh, Valentines Day
- Jacquline: என் Life-ல அடுத்த Step எடுக்கப்போறேன் அது..." | Thaenmozhi B.A
- Video : Thenmozhi BA Serial Team Cake வெட்டி கொண்டாட்டம், Thenmozhi 300 | Jacquline, Vijay TV