Valimai BWE
www.garudabazaar.com

அமீர் - வெற்றிமாறன் இணையும் புதிய படத்திற்கு யுவன் செய்த மாஸ் சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: அமீர் - வெற்றிமாறன் இணையும் புதிய படத்திற்கு யுவன் முதல் சம்பவத்தை செய்துள்ளார்.

Yuvan completed the first song for ameer Iraivan Miga Periyavan

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இயக்குநர் அமீர் இணையக்கூடிய புதிய  படத்திற்கு "இறைவன் மிகப் பெரியவன்" என பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் லுக் போஸ்டரும் முன்னர் வெளியாகி உள்ளது. 

கடந்த பிப்ரவரி 2 அன்று, இந்த படத்தின் அறிவிப்பின் போது “ஒரு திரைப்படம் தனி ஒருவரின் Vision தான். இன்னொருவரின்  Vision-னுடன் இணையும்போது அது இன்னும் அழகாகும். எனது அடுத்த படைப்பு விரைவில் தொடங்கப்படவிருக்கிறது” என அமீர் கூறியிருந்தார்.

Yuvan completed the first song for ameer Iraivan Miga Periyavan

இந்த படத்திற்கு தங்கம், வெற்றிமாறன் இருவரும் கதை எழுத, அமீர் திரைக்கதை அமைத்து இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து இந்த படத்திற்கான முதல் பாடலை உருவாக்கி விட்டதாக அமீர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "மரியாதைக்குரிய பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடக நண்பர்களுக்கு, இன்று 22.02.2022 இந்த சிறப்பான நாளில் எனது இயக்கத்தில் உருவாகும் "இறைவன் மிகப்பெரியவன்" திரைப்படத்திற்கான முதல் பாடலை "இசை இளவல்" யுவன் ஷங்கர் ராஜா அவர்களுடன் சேர்ந்து கம்போஸ் செய்து முடித்திருக்கிறேன் என்பதை மகிழ்வோடு தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Yuvan completed the first song for ameer Iraivan Miga Periyavan

அமீர், வெற்றிமாறனுடன் வட சென்னை படத்தில் நடித்துள்ளார். மேலும் வாடிவாசல் படத்திலும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். தற்போது அமீர் சந்தனத்தேவன் படத்தை ஆர்யா நடிப்பில் உருவாக்கி வருகிறார். தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள மாறன் படத்திலும் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  இந்த புதிய படத்தை தொடர்ந்து சூரி நடிப்பில் ஒரு படத்தை அமீர் இயக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன், பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ப்டங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தயாரிப்பாளராகவும் காக்கா முட்டை, உதயம் NH4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். 5 முறை தேசியவிருதை வாங்கியவர்.

Yuvan completed the first song for ameer Iraivan Miga Periyavan

இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, 'பாவக்கதைகள்' படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி வருகிறார். விடுதலைக்கு பிறகு சூர்யா நடிப்பில் வெற்றிமாறன், தனது அடுத்த படமான வாடிவாசலில், எழுத்தாளர் "சி சு செல்லப்பா" அவர்கள் எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.இதற்கிடையில் அதிகாரம் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி உள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan completed the first song for ameer Iraivan Miga Periyavan

People looking for online information on Ameer, Iraivan Miga Periyavan, Vetrimaaran, Yuvan, Yuvan Shankar Raja will find this news story useful.