சிவகார்த்திகேயனுக்கு பிறகு பிளாக் ஷீப் டீமுடன் இணையும் யூட்யூப் ராஜ் மோகன்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 16, 2019 12:44 PM
யூட்யூப் வீடியோக்கள் மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் அடைந்தவர் ’புட் சட்னி’ ராஜ்மோகன். ஸ்கெட்ச் வீடியோக்கள்; அரசியல், சமூக பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள், விவாதங்கள், பிரபலங்களின் பேட்டிகள் என்று பல்வேறு காணொலிகள் மூலம் இவர் இணையத்தில் அறியப்பட்ட முகமாக மாறினார்.

முதல் முறையாக இவர் ஒரு சினிமாவை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முழு நீள காமெடி படமாக உருவாகும் இதை இவர் பிரபல யூட்யூப் சேனலான 'ப்ளாக் ஷீப்' டீமுடன் இணைந்து உருவாக்குகிறார். ’ராக்ஃபோர்ட் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம்’ (Rockfort Entertainment) இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.
பிளாக் ஷீப் டீம், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஏற்கெனவே ரியோ, ஆர்ஜே விக்னேஷ்காந்தை வைத்து ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ பத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
Tags : Put chutney rajmohan