யஷ் நடிப்பில் வெளியான KGF 2.. Prime Video ஸ்டோரில் இனி Rent எடுத்தும் பாக்கலாம்.. வெளியான அசத்தல் அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு மையமான அமேசான் பிரைம் வீடியோ, பேன் இந்தியா பிளாக்பஸ்டர் திரைப்படமான கே.ஜி.எஃப் : அத்தியாயம் 2'வை பிரைம் வீடியோ ஸ்டோரில் கொண்டு வந்துள்ளது பற்றி அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Yash blockbuster KGF 2 available to rent on Prime Video Store

பிரைம் வீடியோ ஸ்டோரில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள திரைப்படத்தை Rent-க்கு எடுக்கும் சேவையின் மூலம், டிஜிட்டல் சப்ஸ்க்ரிப்ஷன் செய்வதற்கு முன்பாகவே, KGF 2 படத்தின் Early access-ஐ பெற முடியும்.

Rent மூலம் படம் பார்க்கலாம்..

திரைப்பட ஆர்வலர்கள் - அதாவது பிரைம் உறுப்பினர்கள் மற்றும் பிரைம் உறுப்ப்பினர்கள் இல்லாதவர்கள் கூட, இனிமேல் 199 ரூபாய்க்கு பிரைம் வீடியோ ஸ்டோரில் திரைப்படத்தை Rent-க்கு எடுத்து, திரை அனுபவத்தை அனுபவிக்க முடியும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் KGF 2 படத்தையும், வேறு இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள் என உலகளவில் புகழ்பெற்ற பல திரைப்படங்களையும் பிரைம் ஸ்டோரில் Rent எடுக்க முடியும்.

KGF Chapter 2..

2018 ஆம் ஆண்டு, KGF படத்தின் முதல் பாகம் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, இதன் இரண்டாம் பாகம், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகி, இந்தியா முழுவதும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதில் நடிகர் யஷ் முதன்மை கதாத்திரத்தில் நடிக்க, அவருடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா தண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படத்தை, ஹோம்பலே நிறுவனம் சார்பில் விஜய் கிர்கண்டுர் தயாரித்திருந்தார்.

Yash blockbuster KGF 2 available to rent on Prime Video Store

அமேசான் பிரைம் வீடியோ

பிரைம் வீடியோவின் பொழுதுபோக்கு மார்க்கெட்டின் விரிவாக்கம் தான் இந்த திரைப்பட Rent சேவையின் தொடக்கம் ஆகும். நாடெங்கிலுமுள்ள திரைப்பட பிரியர்கள், இந்த சேவையின் மூலம் டிஜிட்டல் சப்ஸ்க்ரிப்ஷன் செய்வதற்கு முன்னரே, சிறந்த விலையில் இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்களை early access செய்ய முடியும்.

இதில், படத்தை Rent எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்திய நாளில் இருந்து 30 நாட்கள் வேலிடிட்டி உண்டு என்பதும், ஒருமுறை பார்க்க தொடங்கி விட்டால், அதனை முடிக்க 48 மணி நேரம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. primevideo.com மற்றும் பிரைம் வீடியோ ஆப் மூலம், Rent பெறுவதற்கான வாய்ப்பை அணுகலாம்.

தொடர்புடைய இணைப்புகள்

Yash blockbuster KGF 2 available to rent on Prime Video Store

People looking for online information on Amazon Prime Video, KGF Chapter 2, Prime Video Store, Sanjay Dutt, Yash will find this news story useful.