திரைப்பட இயக்குநர் துரைவாணன் உடல் நலக்குறைவால் மரணம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 24, 2019 10:15 PM
பிரபல இயக்குநர் துரைவாணன் யாசகன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் கடந்த 2014 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

இந்த படத்தில் 'அங்காடித் தெரு' புகழ் மகேஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இதனையடுத்து துரை வாணன் எந்த படமும் இயக்கவில்லை. தற்போது சில நாட்களாக துரைவாணன் உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இயக்குநர் துரைவாணன் இன்று ( 24.12.19) மாலை 4.30 மணியளவில் மதுரையில் காலமானார். அவரது இறுதி சடங்கு நாளை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Duraivaanan, Yasagan