Fakir Other Banner USA

டிவி நடிகர் மீது பாலியல் பலாத்கார புகார் தெரிவித்த பெண்ணை கைது செய்த போலீஸ் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கரண் ஓபராய் மீது பாலியல் பலாத்கார புகார் தெரிவித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்

Woman who accused actor Karan Oberoi of rape gets arrested for staging a fake attack

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் கரண் ஓபராய்(40) தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக 34 வயது பெண் ஒருவர் மும்பை போலீசில் புகார் அளித்தார்.

பணம் கொடுக்காவிட்டால் அந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று கரண் மிரட்டியதாகவும் அந்த பெண் தன் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்த பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் கரண் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பணம் கொடுக்காவிட்டால் அந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று கரண் மிரட்டியதாகவும் அந்த பெண் தன் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்த பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் கரண் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கரணுடன் சேர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர்களோ அந்த பெண் பொய் சொல்வதாக தெரிவித்தனர். கரண் அந்த மாதிரி ஆள் இல்லை அந்த பெண் வேண்டும் என்றே அவரின் பெயரை கெடுக்க பொய் புகார் அளித்துள்ளார் என்று கூறினார்கள். இந்நிலையில் கரண் மீது தான் அளித்த புகாரை வாபஸ் பெறுமாறு கூறி இரண்டு பேர் தன்னை தாக்கியதாக அந்த பெண் போலீசாரிடம் மீண்டும் புகார் அளித்தார்.

நான் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் அதிகாலையில் நடைபயிற்சிக்கு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்தார்கள். அப்படி நான் காலையில் நடைபயிற்சிக்கு சென்றபோது பைக்கில் வந்த 2 பேர் என்னை தாக்கினார்கள். கரண் மீது அளித்துள்ள புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டினார்கள் என்றார் அந்த பெண்.

கரண் மீதான வழக்கை வாபஸ் பெறாவிட்டால் உன் முகத்தில் ஆசிட் வீசுவோம் என்றும் மிரட்டினார்கள் என அந்த பெண் புகார் தெரிவித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இருவரும் புகார் அளித்த பெண்ணின் வழக்கறிஞரான அலி காசிப் கானின் தூரத்து உறவினர்கள் என்பதும், அவர் சொல்லித் தான் தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்தது.

போலீசார் வழக்கறிஞர் அலியை அழைத்து விசாரித்தபோது அந்த பெண் தான் கரணின் பெயரை கெடுக்க இப்படி ஒரு தாக்குதல் நடத்துமாறு தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். இதையடுத்து பொய் புகார் அளித்த அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.