www.garudabazaar.com

தள்ளிப்போகும் 'இந்தியன் 2' காரணம் என்ன?... வெளியான 'புதிய' தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் என ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

Why Indian 2 Shooting still not resumed?, Details!

கொரோனா காரணமாக இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் படப்பிடிப்பு துவங்கலாம் என மத்திய அரசு அறிவித்தும் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவில்லை. இதனால் இந்தியன் 2 குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்காததன் காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி படப்பிடிப்பிற்காக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 100 பேர் என்ற எண்ணிக்கை போதாது. இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் உட்பட குறைந்த பட்சம் 500 பேராவது தேவை அதனால் தான் மீண்டும் படப்பிடிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Tags : Shankar

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Why Indian 2 Shooting still not resumed?, Details!

People looking for online information on Shankar will find this news story useful.