www.garudabazaar.com

பாலாவோட உண்மையான 'எதிரி' யாரு தெரியுமா?... ரசிகர்கள் 'பதில்' இதுதான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கால்சென்டர் டாஸ்க் மிகுந்த ஆராவாரமாக தொடங்கி, படு மொக்கையாக முடிந்தது. ஆஜீத்-அர்ச்சனா இடையில் பெரிதாக எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அர்ச்சனா போனை வைத்து தானே நாமினேஷனில் வந்தார். சோம்-கேபி முன்பே சொல்லி வைத்து விளையாடியது போல தெரிந்தது.

Who is the real enemy of Balaji Murugadoss in BB House?

இவர்கள் இருவருக்கும் 5 ஸ்டார்கள் கிடைத்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாலாஜி-ஆரி ஜோடியும் இதேபோல ஏமாற்றியது. ஆனால் பாலாஜி கேள்விகளை மட்டுமே கேட்டு போனை வைத்து விட்டதால், ஆரியின் மீது குற்றம் சொல்ல முடியவில்லை. நாமினேஷனில் வந்தது மட்டுமின்றி 5 ஸ்டார்களையும் பாலாஜி, ஆரிக்கு அளித்தார். இதைப்பார்த்த ஆரி, பாலாஜி புத்திசாலி என பாராட்டினார்.

பெரிய லிஸ்ட் எழுதி அதைப்பார்த்து ஆரியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட பாலாஜி வெளியில் வந்து அதுகுறித்து பார்ப்பவர்கள் அனைவரிடமும் இதுகுறித்து பெருமையுடன் பேசிக்கொண்டு இருந்தார். (பிக்பாஸிடம் கூட இதுகுறித்து அவர் பெருமைப்பட்டு இருக்கலாம்) இதைப்பார்த்த ரசிகர்கள் பாலாஜிக்கு எதிரி ஆரியோ, கேப்ரியலாவோ இல்லை. அவர் வாய் தான் அவருக்கு மோசமான எதிரி என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Who is the real enemy of Balaji Murugadoss in BB House?

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.